உள்துறைச் செயலாளர் மாலதி இடமாற்றம்

தமிழகத்தில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பலரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
உள்துறைச் செயலாளராக இருந்த மாலதி, விஜிலென்ஸ் பிரிவின் கமிஷ்னராக நியமிக்கப்பட்டுள்ளார். இது பதவி இறக்கமாகக் கருதப்படுகிறது.
நிதித்துறைச் செயலாளராக இருந்த ஞானதேசிகன், உள்துறைச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
புதிய நிதித்துறைச் செயலாளராக கே.சண்முகம் நியமிக்கப்பட்டு்ள்ளார்.
உணவு, சிவில் சப்ளைஸ் மற்றும் கூட்டுறவுத்துறைச் செயலாளராக சுவரண் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறைச் செயலாளராக உதயசந்திரன் மாற்றப்பட்டு்ள்ளார்.
குடிநீ்ர் வழங்கல் வாரியத்தின் நிர்வாக இயக்குனராக ககன்தீப் சிங் பேடி நியமிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
திமுக ஆட்சியில் நீண்ட காலத்துக்குப் பின் மிக மூத்த, முக்கிய அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications