16.5 டன் அமோனியம் நைட்ரேட் அடங்கிய லாரியை கடத்திய மாவோயிஸ்ட் நக்சலைட்கள்
ராய்ப்பூர்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் 16.5 டன் எடையுள்ள அமோனியம் நைட்ரேட்டுடன் வந்த லாரியை மாவோயிஸ்ட் நக்சலைட்கள் கடத்தியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
லாரியில் இருந்தது உயர் ரக அமோனியம் நைட்ரேட் என அதிகாரிகள் தெரிவித்துள்ளதால் பரபப்பு கூடியுள்ளது. விசாகப்பட்டனத்திலிருந்து இந்த லாரி வந்து கொண்டிருந்தது.
இந்த அமோனியம் நைட்ரேட், நைட்ரஜன் உரமாக பயன்படுத்தப்படும். அதேசமயம், வெடிகுண்டுகள் தயாரிக்கவும் இது பயன்படுத்தப்படும் என்பதால், அதிகாரிகளிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய பஸ்தார் பகுதியில் வைத்து இந்த லாரியை நக்சலைட்கள் கடத்தியுள்ளனர்.
தலைநகர் ராய்ப்பூருக்கு இந்த லாரி போய்க் கொண்டிருந்தது. விசாகப்பட்டனத்திலிருந்து பஸ்தார் வழியாக ராய்ப்பூர் போவது ஷார்ட் கட் என்பதால் நக்சலைட் ஆதிக்கம் நிறைந்த இந்தப் பகுதி வழியாக அந்த லாரி போனதாகும்.
நக்சலைட்களின் கோட்டை வழியாக சென்ற இந்த லாரிக்குப் பாதுகாப்பாக எந்த வீரரும் உடன் செல்லவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.
லாரியைக் கடத்திய நக்சலைட்கள் டிரைவரை மட்டும் விடுவித்தனர். அவர் தப்பி வந்த பஸ்தார் மாவட்ட எஸ்.பி. சுந்தரராஜிடம் விஷயத்தைக் கூறிய பிறகே இந்த விவரம் தெரிய வந்தது.
தற்போது லாரியைத் தேடி தீவிர வேட்டை தொடங்கியுள்ளது. மாநிலம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது.
ஐஇடி ரக வெடிகுண்டுகளை நக்சலைட்கள் இந்த அமோனியம் நைட்ரேட்டை வைத்துதான் தயாரித்து வருகின்றனர் என்று பாதுகாப்புப் படையினர் ஏற்கனவே கூறியுள்ளனர். இந்த நிலையில் பெருமளவிலான அமோனியம் நைட்ரேட்டை அவர்கள் கடத்தியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு இதே பகுதியில் வைத்து டெட்டனேட்டர்களுடன் சென்ற ஒரு லாரியை நக்சலைட்கள் கடத்தியது நினைவிருக்கலாம். இதுவரை அந்த டெட்டனேட்டர்கள் கிடைக்கவே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications