லக்சம்பர்க் நாட்டு வங்கியை வாங்கியது இந்துஜா குழுமம்!
சென்னை: லக்சம்பர்க் நாட்டின் தனியார் வங்கியை வாங்கியது இந்தியாவின் இந்துஜா குழுமம்.
கேபிசி குழுமத்தின் 'கேபிஎல் யூரோப்பியன் பிரைவேட் பேங்கர்ஸ் எஸ்ஏ'யை வாங்க ரூ 8770 கோடி கொடுத்துள்ளது இந்துஜா குழுமம். இந்த வங்கிக்கு 47.4 பில்லியன் யூரோ சொத்துக்கள் உள்ளன.
ஐரோப்பாவின் 10 நாடுகளில் 55 கிளைகளுடன் இயங்குகிறது இந்த வங்கி. ஜேபி மார்கன் சேஸ் ஆலோசனையுடன் டாய்ஷ் வங்கி மற்றும் ஸ்பென்ஸர் ஹவுஸ் பார்ட்னர்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து இந்த வங்கியை வாங்குகிறது இந்துஜா.
கேபிஎல் வங்கியில் உள்ள தனது அனைத்து பங்குகள் மற்றும் துணை நிறுவனப் பங்குகளையும் இந்துஜாவுக்கு விற்கிறது கேபிசி. இந்த வங்கியை வாங்கிய பிறகு, அதை 100 நாடுகளில் பல நூறு கிளைகளுடன் பரவச் செய்வதே தங்கள் நோக்கம் என்று தெரிவித்துள்ளது இந்துஜா குழுமம்.
இதுகுறித்து இந்துஜாவின் தலைவர் ஸ்ரீசந்த் இந்துஜா கூறுகையில், "இந்த வங்கியை நாங்கள் வாங்குவதால், அதில் பணியாற்றுபவர்கள் யாரும் பயம் கொள்ளத் தேவையில்லை. முன்னிலும் மேம்பட்ட சூழலில், நிறைவான சம்பளத்துடன் பணியாற்றலாம். ஆசியாவிலும் இந்தியாவிலும் இந்த வங்கியை பிரபலப்படுத்துவதே எங்கள் நோக்கம்" என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications