ரூ.3,041 கோடிக்கு பேங்க் ஆப் ராஜஸ்தானை வாங்கும் ஐசிஐசிஐ!

இதன் மூலம் ஐசிஐசிஐ வங்கியின் கிளைகள் மேலும் 25 சதவிகிதம் விரிவடைகிறது. இந்த இணைப்புக்கென ரூ.3,041 கோடி தருகிறது ஐசிஐசிஐ.
இந்தத் தொகையை ரொக்கமாகச் செலுத்தாமல், பேங்க் ஆப் ராஜஸ்தானின் 118 பங்குகளுக்கு ஐசிஐசிஐயின் 25 பங்குகளைத் தர முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான ஒப்புதலை ஐசிஐசிஐ வங்கியின் இயக்குநர்கள் குழு நேற்று வழங்கியது.
பேங்க் ஆப் ராஜஸ்தான் வங்கியின் புரமோட்டராக உள்ள பி கே தயாளுக்கு அந்த வங்கியில் 55.01 சதவீத பங்குகள் உள்ளன. இவற்றை அவர் ஐசிஐசிஐ வங்கிக்கு தருவதன் மூலம் ரூ.1,673 கோடியைப் பெறுகிறார். இணைப்புக்குப் பின் ஐசிஐசிஐ வங்கியின் 1.69 சதவீத (2 கோடி) பங்குகள் அவருக்குத் தரப்பட உள்ளது.
ஆனால் வங்கியின் நிர்வாகத்தில் எந்த மாறுதலும் இருக்காது. தயாளுக்குப் பொறுப்புகள் எதுவும் தரப்படாது என ஐசிஐசிஐ நிர்வாக இயக்குநர் சந்தா கோச்சார் தெரிவித்தார்.
அதேபோல, பேங்க் ஆப் ராஜஸ்தானின் எந்தப் பணியாளரும் நீக்கப்பட மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications