ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் எந்தவித விசாரணைக்கும் தயார்!-ராசா

ஹைதராபாத் நகரில் உலக தொலை தொடர்பு மாநாடு நேற்று தொடங்கியது. 142 நாடுகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் அதில் பங்கேற்றனர். மாநாட்டை ராசா தொடங்கி வைத்தார்.
பின்னர் அவரைச் சந்தித்த நிருபர்கள், 2008ம் ஆண்டு நடந்த 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஏல விவகாரம் பற்றி கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த ராசா, தங்களுக்கு எதிராக ஏதாவது குற்றச்சாட்டு எழுந்தால் அது தொடர்பான விசாரணையை ஆட்சியாளர்கள் அனைவருமே எதிர் கொள்வது உலக வழக்கம்.
பிரதமர் மன்மோகன் சிங்கும் 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். 1999ம் ஆண்டு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி உருவாக்கப்பட்ட விதிகளையே நான் பின்பற்றினேன்.
இது தொடர்பாக பிரதமரிடமும் விளக்கம் அளித்துள்ளேன். 2ஜி அலைவரிசை ஒதுக்கீட்டில் எந்த விதி மீறலும் நடைபெறவில்லை. இது தொடர்பாக, எந்தவித வெளிப்படையான விசாரணைக்கும் தயாராக இருக்கிறேன். மேலும், 2ஜி அலைவரிசை ஒதுக்கீட்டை ரத்து செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்றார்.
முன்னதாக மாநாட்டில் அவர் பேசுகையில், வளரும் நாடுகளில் தொலைத்தொடர்பு துறையின் அபார வளர்ச்சிக்கு கம்பியில்லா தொழில்நுட்பம் முக்கிய பங்காற்றியுள்ளது. அகண்ட அலைவரிசை சேவை துறையின் வளர்ச்சிக்கும் கம்பியில்லா தொழில்நுட்பம் முக்கிய பங்காற்றும் என நம்புகிறோம். தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு வளர்ச்சியை தவறான காரியங்களுக்கு பயன்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதற்கேற்ற சட்ட அமைப்புகளை உருவாக்க வேண்டும்.
இந்த நாட்டை அறிவாற்றல் மிகுந்த சமுதாயமாக மாற்றுவதற்கு தகவல் தொழில்நுட்பம் சிறந்த கருவி. பழைய தொழில்நுட்பத்தில் இருந்து நவீனத்துக்கு தொலைத்தொடர்புத் துறை மிக வேகமாக மாறி வருகிறது. இந்தத் துறையின் உற்பத்தி கேந்திரமாக இந்தியாவை மற்றுவதே எங்களுடைய நோக்கம்.
உள்நாட்டினர் அல்லது வெளிநாட்டினர் என தொலை தொடர்பு மேம்பாட்டில் ஈடுபடுவது யாராக இருந்தாலும் இந்தியாவில் பாதுகாப்பான சூழல் கிடைக்கும்.
60 கோடி இணைப்புகளுடன் உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய தொலைபேசி நெட்வொர்க் கொணாட நாடாக இந்தியா உள்ளது. மாதந்தோறும் 2 கோடி புதிய இணைப்புகள் தரப்படுகின்றன. அதே நேரத்தில், சாதாரண சேவையைக் கூட பெற முடியாத நிலையில் உலகின் மூன்றில் ஒரு பங்கு மக்கள் உள்ளனர். இந்த ஏற்றத்தாழ்வை போக்க, இந்த மாநாடு வழிவகை செய்யும் என கருதுகிறேன் என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications