பஸ் டிரைவரை தாக்கிய கால்சென்டர் ஊழியர்!
சென்னை: சென்னை அம்பத்தூர் பஸ் டெப்போவில் அரசு பஸ் டிரைவரை தாக்கிய கால்சென்டர் ஊழியர் கைது செய்யப்பட்டார்.
அம்பத்தூர் எஸ்டேட் பஸ் டெப்போ அருகே நேற்றிரவு 10 மணியளவில் கால்சென்டர் ஊழியரான இப்ராகிம் என்பவர் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது 65 பி மாநகர பஸ் டிப்போவுக்குள் வந்தது.
வழியில் மோட்டார் சைக்கிளுடன் நின்றிருந்த இப்ராகிமை ஓரத்தில் நிற்குமாறு டிரைவர் ஆறுமுகம் கூறினார். ஆனால் அவர் நகர மறுத்தார். இதனால் டிரைவருக்கும் அவருக்கும் தகராறு ஏற்பட்டு அடிதடியானது.
இப்ராகிம் தாக்கியதில் ஆறுமுகம் காயமடைந்தார். இதனால் மற்ற டிரைவர்கள் இப்ராகிமை முற்றுகையிட்டு தாக்கினர்.
இந்த சம்பவத்தையடுத்து டெப்போவில் இருந்து பஸ்களை எடுக்க டிரைவர்கள் மறுத்துவிட்டனர். சம்பவம் குறித்து அறிந்து போலீசார் அங்கு வந்து பஸ்களை இயக்குமாறு டிரைவர்களிடம் கூறினர். ஆனால், இரவு 11 மணி ஆகியும் பஸ்களை இயக்காததால் கோபமடைந்த மக்கள் ஆத்திரமடைந்து கல்வீச்சில் இறங்கினர்.
இதில் உதவி போலீஸ் கமிஷனர் குமாரவேல், சப்-இன்ஸ்பெக்டர் கமலகண்ணன் காயமடைந்தனர். இதையடுத்து போலீசார் தடியடி நடத்தினர்.
இதைத் தொடர்ந்து புறநகர் கமிஷனர் ஜாங்கிட் விரைந்து வந்தார். டிரைவர்களுடன் பேச்சு நடத்திய அவர் இப்ராகிமை கைது செய்ய உத்தரவிட்டார்.
இந்த மோதலால் அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் இரவில் பெரும் பரபரப்பு நிலவியது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications