எஸ்எஸ்எல்சி: 82.56% பேர் தேர்ச்சி-நெல்லை மாணவி முதலிடம்
மாணவர்கள் 79.4 சதவீதமும், மாணவிகள் 85.5 சதவீதமும் தேர்ச்சியடைந்துள்ளனர். இதன்மூலம் இந்த ஆண்டும் மாணவர்களைவிட மாணவிகளே அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
495 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடத்தை திருநெல்வேலி டவுனில் உள்ள நெல்லை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி எஸ்.ஜாஸ்மின் பிடித்துள்ளார்.
அவர் பெற்றுள்ள மதிப்பெண்கள்:
தமிழ் - 98
ஆங்கிலம் - 99
கணிதம் - 100
அறிவியல் - 100
சமூக அறிவியல் - 98
மொத்தம் - 495
4 பேர் இரண்டாம் இடம்:
கூடலூர் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி கே.கே. நிவேதிதா, கரூர் கல்வி மாவட்டம் தலப்பட்டியில் உள்ள பி.ஏ. வித்யாபவன் மேல் நிலைப்பள்ளி மாணவி ஆர். சிவப்பிரியா, சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள ஸ்ரீவெங் கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி மாணவி எம். பிரியங்கா புதுச்சேரி அபிஷேகப்பாக்கத்தில் உள்ள நேஷனல் மேல்நிலைப்பள்ளி மாணவர் டி.தமிழரசன் ஆகிய நான்கு பேரும் 494 மதிப்பெண்கள் எடுத்து 2வது இடத்தைப் பிடித்துள்ளனர்.
3வது இடம் பிடித்த 10 பேர்:
தென்காசி கல்வி மாவட்டம் புளியங்குடியில் உள்ள ஏ.வி.எஸ். மேல் நிலைப்பள்ளி மாணவி எம்.ரம்யா,
பாளையங்கோட்டை சாராதக்கர் பெண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவி எம்.ஜெயிலின், பரமக்குடி ஏ.வி. மேல் நிலைப்பள்ளி மாணவி பி.திலகவதி, பரமக்குடி சவுராஷ்டிரா மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவர் பிரதீப்குமார்,
மதுரை சவுத்கேட் பகுதியில் உள்ள நாடார் மேல்நிலைப்பள்ளி மாணவர் பி.ஜெயமுருகன்,
மதுரை புனித மேரி மேல்நிலைப்பள்ளி மாணவர் எஸ்.கே.நாகராஜன், நாமக்கல் கல்வி மாவட்டம் அனியபுரம் லிட்டில் ஏஞ்சல்ஸ் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜெ.இந்துஜா, கரூர் கல்வி மாவட்டம் புன்னம் சத்திரம் சேரன் மேல் நிலைப்பள்ளி மாணவர் ஆர்.ராஜ்சூர்யா, ஆரணி புனித ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி எம்.நஸ்ரின் பாத்திமா, புதுச்சேரி செல்லப்பெருமாள் பேட்டையில் உள்ள விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி மாணவி ஜி.ரேவதி 10 பேரும் 493 மதிப்பெண்கள் எடுத்து 3வது இடத்தைப் பிடித்துள்ளனர்.
கணிதப் பாடத்தில் 100க்கு 100 எடுத்தவர்கள் குறைவு:
கணிதப் பாடத்தில் இந்த ஆண்டு 2,399 பேர் தான் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு கணிதத்தில் 5,112 பேர் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
மெட்ரிக் தேர்வு-பவித்ரா முதலிடம்:
மெட்ரிக் தேர்வில் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த பவித்ரா 495 மதிப்பெண்களைப் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.
சென்னை முகப்பேர் வேலம்மாள் பள்ளி மாணவி ஸ்ரீவந்தனா, பாண்டிச்சேரியைச் சேர்ந்த ஸ்ரேயா அகர்வால் ஆகியோர் 493 மதிப்பெண்களைப் பெற்று இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளனர்.
சென்னை பஞ்சட்டி வேலம்மாள் மெட்ரிக் பள்ளி மாணவி லாவண்யா, 492 மதிப்பெண்கள் எடுத்து 3வது இடம் பிடித்துள்ளார்.
எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவைக் காண
மெட்ரிக் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளை காண
ஆங்கிலோ-இந்தியன், ஓஎஸ்எல்சி முடிவுகளைக் காண
விருதுநகர் மாவட்டம் மீண்டும் முதலிடம்:
தொடர்ந்து 25 ஆண்டுகளாக எஸ்எல்எல்சி தேர்ச்சி விகிதத்தில் முதலிடம் பிடித்துள்ளது விருதுநகர் மாவட்டம். இம்மாவட்டத்தில் இந்த ஆண்டு 24,213 பேர் தேர்வு எழுதினர். இதில் 23,301 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
85 சதவீதம் தேர்ச்சி-மாநகராட்சி பள்ளிகள் சாதனை:
சென்னையில் 65 மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளில் 9,117 மாணவ- மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினர். இதில் 7,882 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 85.26 சதவீத தேர்ச்சியாகும். மேலும் கடந்த ஆண்டை விட 3 சதவீதம் பேர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழில் 6 பேர் 99 மதிப்பெண்கள்:
எஸஎஸ்எல்சியில் தமிழ் பாடத்தில் 6 பேர் 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அவர்கள், கூடலூர் விஷ்னுபாரதி, காவட்டிபட்டி அனுசுயா, மதுரை தனுசியா, நாமக்கல் மகரஜோதி, போத்தனூர் காயத்ரி, நாமக்கல் வளர்மதி ஆகியோர்.
ஆங்கிலோ-இந்தியன்: கோவை முதலிடம்...
ஆங்கிலோ- இந்தியன் பத்தாம் வகுப்பு தேர்வில் கோவை புனித பிரான்சிஸ் பள்ளி மாணவி ரெனி ஏஞ்சல், கோவை ஸ்டேன்ஸ் மேல் நிலைப்பள்ளி மாணவி நம்ரிதா ஆகியோர் 483 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்.
திருச்சி புனித ஜோசப் பள்ளி மாணவி அபிநயா, கோவை புனித பிரான்சிஸ் பள்ளி மாணவி ஸ்ரீஅரவிந்தினி, தூத்துக்குடி ஹோலி கிராஸ் பள்ளி மாணவி சந்தோஷினி ஆகிய மூவரும் 482 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளனர்.
திருச்சி ஜோசப் பள்ளி மாணவி ஸ்ருதி ஷிவானி, சேலம் புனித இருதய பள்ளி மாணவி காவ்யா, திருச்சி ஜோசப் பள்ளி மாணவி பவித்ரமீரா, தூத்துக்குடி ஹோலிகிராஸ் பள்ளி மாணவி ஸ்ருதிசங்கரி 481 மதிப்பெண்கள் எடுத்து 3வது இடத்தை பிடித்துள்ளனர்.
ஓஎஸ்எல்சி-பள்ளபட்டி மாணவிகள் முதலிடம்:
ஓஎஸ்எல்சி தேர்வில் கரூர் பள்ளபட்டி யூ.எச். ஓரியண்டல் அரபிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ஃபாமிதா பானு, .ஜெய்னாப் ஆகியோர் 476 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்.
அதே பள்ளியைச் சேர்ந்த நாசியா, 473 மதிப்பெண் பெற்று இரண்டாவது இடத்தையும், சுகைனா பாத்திமா, 472 மதிப்பெண் பெற்று 3வது இடத்தையும்,
திருப்பத்தூர், ஆம்பூர், அனைக்கார் ஓரியண்டல் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த முகமது ரெய்கான், 472 மதிப்பெண்கள் பெற்று 3வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
பிரெஞ்ச் பாடம்-சென்னை மாணவிகள் முதல் 3 இடம்:
பிரெஞ்ச் மொழியை முதல் பாடமாக எடுத்து சென்னை மாணவி மிகாராபனி மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள ஆசான் மெமோரியல் மெட்ரிக் பள்ளியில் படிக்கும் இவர் 491 மதிப்பெண் எடுத்துள்ளார். பிரெஞ்ச் பாடத்தில் 99 மதிப்பெண் பெற்றுள்ளார்.
சென்னை முகப்பேர் ஸ்பார்ட்டன் மெட்ரிக் பள்ளி மாணவி ஜெனிதா லிடியா, சேலம் குளுனி பள்ளி மாணவிகள் ஸ்வாதி ரத்னா, உமா காவியா ஆகியோர் 490 மதிப்பெண்கள் பெற்று 2வது இடம் பிடித்துள்ளனர்.
3வது இடத்தை சேலம் மாணவர் விகாஷ் அரவிந்த், மாணவி ஸ்ரீலதா செல்வி, சென்னை மாணவி திவ்யா ஆகிய 3 பேர் பிடித்துள்ளனர்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்













Click it and Unblock the Notifications