சென்னை மாநகராட்சி திமுக கவுன்சிலர் படுகொலை
சென்னை: சென்னை மாநகராட்சி திமுக கவுன்சிலர் சேரன் தனது வார்டு அலுவலகத்திலேயே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். 6 பேர் கொண்ட கும்பல் அவரை வெட்டிச் சாய்த்தது.
சென்னை திருவல்லிக்கேணி துளசிங்க பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த பொ.மா.சேரன் (44), 89வது வட்ட திமுக செயலாளராகவும், 93வது வட்ட மாநகராட்சி கவுன்சிலராகவும் இருந்தார்.
இவர் தினமும் காலை 9 மணி அளக்கு ராயப்பேட்டை பாலாஜி நகர் 3வது தெருவில் உள்ள மாநகராட்சி 93வது வார்டு அலுவலகத்துக்கு வருவது வழக்கம். அங்கு தினமும் மக்களை சந்திப்பார்.
இன்றும் வழக்கம்போல் வார்டு அலுவலகத்தில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த 6 பேர் சேரனுடன் பேசிக் கொண்டிருந்தனர். பேசிக் கொண்டிருந்தபோதே அவர்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து 6 பேரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த பட்டாக் கத்தியை எடுத்து சேரனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய சேரனை அவரது மனைவி அருண்மொழி சம்பவ மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். ஆனால் அவர் வழியிலேயே உயிரிழந்தார்.
சம்பவ இடத்தில் துணை கமிஷனர் பெரியய்யா, உதவி கமிஷனர்கள் வசந்தகுமாரி, ரவீந்திரன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து பல்லாமணி, சார்லஸ், கார்த்திக் ஆகிய 3 பேரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவம் குறித்து துணை கமிஷனர் பெரியய்யா கூறுகையில், 93வது வட்டத்தில் கட்சிப் பதவி வாங்குவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை நடைபெற்றதா, அல்லது இப்பகுதியில் உள்ள காலி மனை ஒன்றை விற்பனை செய்தது தொடர்பாக கொலை நடந்ததா என்று விசாரித்து வருகிறோம்.
கொலையாளிகளைப் பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பட்டப்பகலில் நடந்த இந்தக் கொலையால் ராயப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பும் பீதியும் நிலவுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications