வர்த்தக ஒப்பந்தம்- இந்தியாவுக்கு எதிராக இலங்கையர் ஆர்ப்பாட்டம்!
கொழும்பு: இந்தியாவுடன் வரும் ஜூன் மாதம் இலங்கை கையெழுத்திட உள்ள வர்த்தக ஒப்பந்தத்துக்கு இலங்கையில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
'சீபா' (Comprehensive Economic Partnership Agreement -CEPA) எனப்படும் வர்த்தக உடன்படிக்கையில் இந்தியாவும் இலங்கையும் கையெழுத்திட உள்ளன.
இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச, ஜூன் 8-ம் தேதி இந்தியாவுக்கு வருகிறார். அவரது இந்த பயணத்தின் போது இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே 'சீபா' எனும் வர்த்தக உடன்பாடு மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல் வெளியானது.
இந்த உடன்படிக்கை இலங்கையை விட இந்தியாவுக்கு அதிக வாய்ப்புகள் நிறைந்ததாக காணப்படுவதாக இலங்கையர்கள் விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர்.
எனவே இந்தியாவுடன் வர்த்தகம் செய்து கொள்ளக்கூடாது என்று கூறி டாக்டர்கள், என்ஜீனியர்கள் உள்பட ஏராளமானோர் கொழும்புவில் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் உள்நாட்டுத் தொழிற்சாலைகள் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று கூறி கோஷமிட்டனர். அதிபரின் அலரி மாளிகை முன் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதையடுத்து போராட்டக்காரர்களை அழைத்து அதிபர் மகிந்த ராஜபட்ச பேச்சுவார்த்தை நடத்தினார். இலங்கையை பாதிக்கும் எந்த ஒரு உடன்பாட்டையும் தனது தலைமையிலான அரசு மேற்கொள்ளாது என்று அவர்களிடம் உறுதி அளித்தார்.
அப்படி ஒருவேளை உடன்பாடு செய்து கொள்ளப்பட்டாலும் அது இரு நாடுகளுக்கும் சம அளவில் பலனை அளிப்பதாகவே இருக்கும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
இதையடுத்து அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications