நாடாளுமன்றம்-சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: அத்வானி வலியுறுத்தல்
டெல்லி: நாடாளுமன்றம் மற்றும் நாட்டின் அனைத்து மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் பாஜக தலைவர் அத்வானி வலியுறுத்தினார்.
பிரதமரை அத்வானி நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறிய மக்களின் பெயர்களும், மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பட்டியலில் இடம்பெற்று வருவதாகவும், அதைத் தடுக்க வேண்டும் என்றும் கோரினார்.
மேலும் நாடாளுமன்றம், சட்டப்பேரவைகள் அமையும்போது அதன் பதவிக் காலத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும், இடையில் கலைக்கவே முடியாத வகையில் சட்டரீதியிலான மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்றும் கோரினார்.
நாடு சுதந்திரம் அடைந்த பின் 1952, 1957, 1962, 1967 போன்ற ஆண்டுகளில் நாடாளுமன்றம் தனது முழுமையான 5 ஆண்டு பதவி காலத்தை பூர்த்தி செய்ய வில்லை. அந்த காலகட்டங்களில் பல மினி பொது தேர்தல்கள் நடந்தன. இதுபோல பல மாநிலங்களிலும் சட்டசபைகள் இடையிடையே கலைக்கப்பட்டு திடீர் தேர்தல்கள் நடந்துள்ளன. எதிர்காலத்தில் இதைத் தடுக்க அரசியல் சட்ட மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று அத்வானி கூறினார்.
மேலும் நாடு முழுவதும் சட்டசபைகளுக்கும், நாடாளுமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வழிவகை செய்யப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications