இலங்கையில் விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதி கைது
கொழும்பு: இலங்கையில் விடுதலைப் புலிகளின் தளபதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புலிகளின் தளபதிகளில் ஒருவரான செல்வகுமார் உதயன் இலங்கை புல்மோட்டை கட்டகுளம் என்னுமிடத்தில் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ள.
அவர் கிழக்குப் பகுதியில் முக்கியத் தளபதியாக செயல்பட்டவர் என்றும், ஒரு வீட்டில் மறைந்திருந்தபோது கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
'போர் வெற்றியால் பின்தள்ளப்பட்ட அதிகார பகிர்வு பேச்சு':
தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிப்பது குறித்து இலங்கையில் அரசியல் தலைவர்கள் பேசி வந்தனர். ஆனால், போரில் இலங்கைக்கு கிடைத்த ராணுவ வெற்றி, அதிகாரப் பகிர்வு குறித்த பேச்சுகளை பின்னுக்குத் தள்ளியுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இலங்கைத் தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு என்ற தலைப்பிலான கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய காரத்,
இலங்கையில் போர் முடிந்து ஓராண்டாகிறது. அந்த நாட்டில் ஜனநாயகத்தை முன்னெடுத்துச் செல்ல இப்போது வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிப்பது குறித்து இலங்கையில் அரசியல் தலைவர்கள் பேசி வந்தனர். ஆனால், போரில் இலங்கைக்கு கிடைத்த ராணுவ வெற்றி, அதிகாரப் பகிர்வு குறித்த பேச்சுகளை பின்னுக்குத் தள்ளியுள்ளது.
இலங்கையைப் பொறுத்தவரை இரண்டு முக்கியமானப் பிரச்சனைகள் உள்ளன.
முதலாவது, தமிழர் பகுதிகளில் மீண்டும் சகஜ நிலையை ஏற்படுத்த வேண்டும்.
இரண்டாவதாக, தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு கிடைக்கும் வகையில் அரசியல் சட்டத்தை திருத்த வேண்டும்.
இலங்கையில் சிங்களர்கள் மற்றும் தமிழர்களின் அரசியல் தலைவர்கள் அரசியல் தீர்வை நோக்கி பணியாற்ற வேண்டும். பிரச்சனைகளை ஜனநாயக ரீதியில் பேசித் தீர்ப்பதற்கு பொதுவான தளம் உருவாக்கப்பட வேண்டும்.
அந் நாட்டு அதிபர் ராஜபக்சே ஜூன் 8ம் தேதி இந்தியா வருகிறார். அப்போது, இலங்கைத் தமிழர்களுக்கு விரைந்து மறுவாழ்வு அளிக்கவும், இந்தப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணவும் இந்தியா வலியுறுத்த வேண்டும் என்றார் காரத்.
இக் கருத்தரங்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ராமகிருஷ்ணன், மத்தியக் குழு
உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications