பாளை சிறையில் போலீசார்-கைதிகள் பயங்கர மோதல்
நெல்லை: பாளையங்கோட்டை சிறையில் நேற்றிரவு அதிகாரிகளை தரக்குறைவாக பேசியதால் கைதிகள், காவலர்கள் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.
பாளையங்கோட்டை மத்திய சிறையில் 1600க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். உள் சிறையில் 10 பிளாக்குளில் தண்டனை கைதிகளும், வெளி சிறையில் உள்ள 3 பிளாக்குகளில் விசாரணை கைதிகளும் உள்ளனர்.
கைதிகளுக்கு இடையே அடிக்கடி மோதல் சம்பவங்கள் நடந்ததை அடுத்து 1998-ம் ஆண்டுக்கு பிறகு கைதிகள் ஜாதிவாரியாக பிரிக்கப்பட்டு தனி தனி பிளாக்குகளில் அடைக்கப்பட்டனர்.
மேலும் கைதிகளுக்கு இடையே செல்போன், கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் தராளமாக புழங்கி வருகின்றன.
இதனால் சிறை அதிகாரிகள் மற்றும் கமண்டோ படையினர் அடிக்கடி சோதனை நடத்தி அவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர். கைதிகளை பார்க்க வருகிறவர்கள், கோர்டுக்கு சென்று வரும் கைதிகள் ஆகியோர் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். இருப்பினும் தடை செய்யப்பட்ட பொருட்களின் புழக்கம் குறைந்தபாடில்லை.
கைதிகள் தினமும் காலை 6 மணிக்கு திறந்து விடப்பட்டு மாலை 6 மணிக்கு செல்லில் அடைக்கப்படுகின்றனர்.
இந் நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு வெளிச் சிறையில் உள்ள கைதிகள் செல்லில் அடைக்கப்பட்டனர். அதன்பிறகு இரவு புதுக் கட்டிடத்தில் உள்ள 2வது பிளாக்கில் துணை சிறை அலுவலர் சேகர் தலைமையில் சிறை காவலர்கள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கிருந்த கைதிகள் சோதனை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவலர்களை தகாத வார்த்தைகளால் திட்டினர். இதனால் காவலர்கள், கைதிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கைதிகள் ஓன்று திரண்டு காவலர்களை தாக்க முயன்றனர்.
இதையடுத்து கூடுதல் காவலர்கள் வரவழைக்கப்பட்டனர். மோதலில் ஈடுபட்ட கைதிகளை உதைத்ததாகத் தெரிகிறது.
தகவல் அறிந்ததும் சிறை அலுவலர் அமிர்தலால் தலைமையில் அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தினர். காவலர்கள் தாக்கியதில் கைதிகள் சிலர் காயமடைந்துள்ளனர்.
இச்சம்பவம் சிறைவட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications