ஆந்திரா காங். அமைச்சரவையில் சிரஞ்சீவி கட்சி!
ஹைதராபாத்: ஜெகன்மோகன் ரெட்டியை ஒடுக்க ஆந்திர அமைச்சரவையில் சிரஞ்சீவியின் கட்சியை சேர்க்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
தெலுங்கு சூப்பர் ஸ்டாரும், பிரஜா ராஜ்ஜியம் கட்சியின் தலைவருமான சிரஞ்சீவியை சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா டெல்லிக்கு அழைத்துப் பேசினார்.
அப்போது ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு தனது கட்சியின் ஆதரவை சோனியா கோரியதாக சிரஞ்சீவி தெரிவித்தார். காங்கிரசில் சேரும் திட்டம் ஏதும் இல்லை என்றும், சோனியாவும் அது குறித்து தன்னுடன் பேசவில்லை என்றும் கூறினார்.
ஆனால், அந்த சந்திப்பின்போது ராஜ்யசபா தேர்தலைத் தொடர்ந்து, இரு கட்சிகளும் கூட்டாக செயல்படலாம் என்றும், காங்கிரஸ் கூட்டணியில் இணைந்தால் பிரஜா ராஜ்ஜியம் கட்சிக்கு அமைச்சர் பதவிகள் தரப்படும் என்றும், சிரஞ்சீவியை அமைச்சராக்கவும் தயார் என்றும் சோனியா கூறியுள்ளதாக் தெரிகிறது.
மறைந்த முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டி தொடர்ந்து முதல்வர் பதவிக்கு குறி வைத்து வருகிறார். தனக்கு முதல்வர் பதவி தராவிட்டால், தனிக் கட்சி தொடங்கவும், தனது ஆதரவு எம்எல்ஏக்களை வெளியில் இழுத்து மாநிலத்தில் முதல்வர் ரோசைய்யா தலைமையிலான ஆட்சியைக் கவிழ்க்கவும் தயாராகி வருகிறார்.
இதை சமாளிக்கவே கடந்த சட்டமன்றத் தேர்தலில் 14 சதவீத வாக்குகளைப் பெற்று 18 இடங்களைக் கைப்பாற்றிய சிரஞ்சீவிக்கு காங்கிரஸ் வலைவீசி வருகிறது.
ஆந்திராவில் 2014ம் ஆண்டு தான் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதற்குள் முதலில் சிரஞ்சீவிக்கு அமைச்சரவையில் இடம் தந்தும், பின்னர் கட்சியையே காங்கிரசுடன் இணைக்கவும் செய்துவிடலாம் என்று சோனியா கருதுகிறார். இதன்மூலம் ஜெகன் மோகன் எதிராக பலமான தலைவர் ஒருவரையும் கட்சியில் உருவாக்கி, 'செக்' வைக்கலாம் என்று காங்கிரஸ் தலைமை கருதுகிறது.
சோனியாவை சந்திக்க ஜெகன் மோகன் முயற்சி:
இதற்கிடையே டெல்லியில் சோனியாவை சந்திக்க ஜெகன்மோகன் ரெட்டி தீவிரமாக முயன்று வருகிறார்.
அவரை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்று கட்சியில் ஒரு தரப்பினர் வற்புறுத்தி வருகின்றனர். இந் நிலையில் ஜெகன்மோகன் ரெட்டி இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
டெல்லியில் நிருபர்களிடம் பேசிய அவர், நான் தவறு செய்ததாக நிரூபித்தால் காங்கிரஸ் கட்சியில் இருந்தே விலக தயாராக இருக்கிறேன். நடந்த விஷயங்கள் பற்றியும் என்னுடைய நிலை குறித்தும் மேலிட தலைவர்களிடம் விளக்கு வதற்காகவே டெல்லி வந்துள்ளேன்.
சோனியாவை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். அவரிடம் எல்லாவற்றையும் விளக்குவேன் என்றார்.
ஆனால், அவரை சோனியா சந்திப்பாரா என்று தெரியவில்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications