தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு-சமச்சீர் கல்வி அமல்
சென்னை: கோடை விடுமுறைக்குப் பின் தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பள்ளிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) திறக்கப்பட்டன.
இந்த ஆண்டு 1 மற்றும் 6ம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்விப் பாடத்திட்டமும் அறிமுகமாகிறது.
சமச்சீர் பாடத் திட்டத்துக்காக தமிழ்நாடு அரசு பாடநூல் நிறுவனம், 1.16 கோடி புத்தகங்களை அச்சிட்டுள்ளது.
வகுப்புகள் தொடங்கும் முதல் நாளிலேயே ஒன்றாம் வகுப்பு மற்றும் 6ம் வகுப்பு மாணவர்களுக்கான சமச்சீர் கல்வி பாடப் புத்தகங்கள் உள்பட அனைத்து வகுப்புகளுக்கும் இலவச பாடப் புத்தகங்கள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
தனியார் பள்ளிகளில் சில நாளையும் (புதன்கிழமை), பெரும்பாலான பள்ளிகள் இந்த வாரத்திலும் திறக்கப்படுகின்றன.
அரசு கட்டணம்தான் வசூலிக்க வேண்டும்:
இந் நிலையில் தமிழகத்தில் தனியார் பள்ளிகள் அனைத்தும் அரசு நிர்ணயித்த கட்டணத்தைத்தான் வசூலிக்க வேண்டும் என்று நீதிபதி கோவிந்தராஜன் உத்தரவிட்டுள்ளார்.
பள்ளிக் கட்டணத்தை நிர்ணயம் செய்ய நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு, தொடக்கப் பள்ளிகள் ரூ. 3,500ம், நடுநிலைப் பள்ளிகள் ரூ. 5,000ம், உயர்நிலைப் பள்ளிகள் ரூ. 8,000ம், மேல்நிலைப் பள்ளிகள் ரூ. 11,000ம் கட்டணம் வசூலிக்கலாம் வரையறை செய்தது.
ஆனால் இந்தக் கட்டண நிர்ணயத்துக்கு அனைத்து தனியார் பள்ளிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
கட்டணத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று 5,450 பள்ளிகள் அரசிடம் மேல்முறையீடு செய்துள்ளன. இது குறித்து தணிக்கையாளர்கள் குழு ஆய்வு செய்து வருகிறது. அந்த ஆய்வறிக்கை வரும் வரை அரசு நிர்ணயித்த கட்டணத்தைத் தான் அனைத்து தனியார் பள்ளிகளும் வசூலிக்க வேண்டும். மறுபரிசீலனைக்கு பிறகு நிர்ணயிக்கப்படும் கட்டணத்தை மாணவர்களிடம் இருந்து பள்ளிகள் பெற்றுக் கொள்ளலாம் என்று நீதிபதி கோவிந்தராஜன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் 10,951 தனியார் பள்ளிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications