எஸ்.ஐ கொலை: பெண் சாராய வியாபாரி, 2 மகள்கள் கைது, 2 மகன்கள் தலைமறைவு
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டில் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது உறவினரான சாராயம் விற்கும் பெண்ணும், அவரது இரு மகள்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொலையைச் சேய்த 2 மகன்கள் தலைமறைவாகிவிட்டனர்.
சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த நீலகண்டன் (59), சிஐடி பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த திங்கள்கிழமை காலை கும்மிடிப்பூண்டி தாலுகா அலுவலகம் முன் வைத்து வெட்டிக் கொல்லப்பட்டார்.
மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த 2 பேர் நீலகண்டனை அரிவாள்களால் சரமாரியாக வெட்டினர். இதில் கழுத்து, மார்பு, தலையில் வெட்டு விழுந் சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார்.
கொலையாளிகளைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்களது விசாரணையில், நிலத்தகராறில் இந்தக் கொலை நடந்தது தெரியவந்தது.
நீலகண்டனின் மகன் தேவேந்திரன் சென்னை வில்லிவாக்கம் சிப்காட் காமராஜர் தெருவில் உள்ள இரண்டரை சென்ட் புறம்போக்கு நிலத்தை அனுபவித்து வந்தார்.
இந்த நிலம் நீலகண்டனின் அக்காள் மகள் சாலம்மாள் (49) வீட்டுக்கு அருகில் உள்ளது. முன்னாள் சாராய வியாபாரியான சாலம்மாள், அந்த நிலம் தன்னுடையது என்று சொந்தம் கொண்டாடி வந்தார்.
இதனால் சாலம்மாளுக்கும், நீலகண்டனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு போலீசிலும் புகார் செய்யப்பட்டு்ள்ளது.
இந் நிலையில் சாலம்மாள் மற்றும் மகள்கள் கஜலட்சுமி (25), ராதிகா (18) ஆகியோர் தூண்டுதலின் பேரில் சாலம்மாளின் மகன்கள் ரகு, அய்யப்பன் உள்ளிட்ட 2 பேர் மோட்டார் சைக்கிளில் சென்று நீலகண்டனை வெட்டிக் கொலை செய்தது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சாலம்மாள், கஜலட்சுமி, ராதிகா ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
தலைமறைவாக உள்ள ரகு, அய்யப்பன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications