உள்ளாட்சித் தேர்தலில் மம்தா மாபெரும் வெற்றி-உடனே பணிந்த காங்கிரஸ்
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
கொல்கத்தா மாநகராட்சியையும், 36 நகராட்சிகளையும் கைப்பற்றி இடதுசாரிகளையும் காங்கிரஸ் கட்சியையும் படுதோல்வி அடையச் செய்துள்ளது.
இதையடுத்து மம்தாவிடம் உடனடியாகப் பணிந்துள்ளது காங்கிரஸ் தலைமை. மேற்கு வங்கத்தில் நடந்த ரயில் கவிழ்ப்பு சம்பவம் தொடர்பாக மம்தாவின் கோரி்க்கையை ஏற்று சிபிஐ விசாரணை நடத்த முடியாது என்று கூறி வந்த மத்திய அரசு, திடீரென அந்த வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்க முன் வந்துள்ளது.
வரும் சட்டமன்றத் தேர்தலில் மம்தாவுடன் கூட்டணி சேர்ந்தால் மட்டுமே இந்த மாநிலத்தில் காங்கிரசின் மானம் தப்பும் என்பதால், அவருக்கு பணிய ஆரம்பித்துள்ளது அந்தக் கட்சி.
மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்தாலும், மாநிலத்தில் அந்தக் கட்சியுடன் மம்தா பானர்ஜி கூட்டு சேரவில்லை. உள்ளாட்சித் தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைக்க முயன்றன.
ஆனால், இரு கட்சிகளும் சமமான இடங்களைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று காங்கிரஸ் கூறியதை மம்தா ஏற்கவில்லை. உங்கள் கூட்டணியே தேவையில்லை என்று கூறி வெட்டிவிட்டுவிட்டு தனித்துப் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்றுள்ளார்.
இரண்டாவது இடத்தை ஆளும் இடதுசாரிகள் பிடித்துள்ளனர். ஆனால், இந்தத் தேர்தலில் காங்கிரஸ் தான் படு கேவலமான தோல்வியைடைந்துள்ளது.
இதையடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் எப்படியாவது மம்தாவுடன் கூட்டணி சேருவதற்காக, அவரது கோரிக்கையை ஏற்று ரயில் கவிழ்ப்பு சம்பவ வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்துள்ளது காங்கிரஸ்,
இதற்கு மேற்கு வங்க அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மம்தா மகிழ்ச்சி:
இதை ரயில்வே அமைச்சரான மம்தா பானர்ஜி மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளார்.
அவர் கூறுகையில், சிபிஐ விசாரணை விஷயத்தில் மத்திய அரசின் முடிவு மகிழ்ச்சியளிக்கிறது.
மேற்கு வங்கத்தில் இடதுசாரிக் கட்சிகளின் 34 ஆண்டு ஆதிக்கத்தை ஒழிக்க பாடுபட்டோம். 34 ஆண்டுகளுக்குப் பின் மேற்கு வங்கத்தில் உள்ளாட்சித் தேர்தலில் எங்களுக்கு மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது.
இதனால் இங்கு உடனடியாக சட்டசபைத் தேர்தலை நடத்த வேண்டும்.
உள்ளாட்சித் தேர்தலில் தோல்வியுற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பதவியில் நீடிப்பதற்கு தார்மிக உரிமை இல்லை என்றார்.
இந் நிலையில் சட்டசபைத் தேர்தலுக்கு முன்பே மேற்கு வங்கத்தின் மம்தா கட்சியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் தீவிரமாக முயன்று வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications