மணல் கொள்ளையை தடுத்த தாசில்தார் மீது திமுகவினர் தாக்குதல்!
திருப்பத்தூர்: மணல் கொள்ளையைத் தடுக்க முயன்ற, திருப்பத்தூர் வட்டாட்சியர் விஜயராணி மீது திமுகவைச் சேர்ந்த சிலர் தாக்குதல் நடத்தினர்.
சிவங்கங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம், கீழச்செவல்பட்டி மணிமுத்தாற்றில் சட்ட விரோதமாக ஆளும் திமுகவைச் சேர்ந்த சிலர் மணல் கடத்தி வருவதாக வட்டாட்சியர் விஜயராணிக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து விஜயராணி மற்றும் ஊழியர்கள் மணல் கடத்துவோரைப் பிடிக்க முயன்றனர். அப்போது வட்டாட்சியரை, ஆளும் கட்சியைச் சேர்ந்த பிரமுர்கள், தரக்குறைவாக பேசித் தாக்கியுள்ளனர்.
இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேவகோட்டை கோட்டாட்சியர் முன்னிலையிலும் மேலும் தகராறு செய்துள்ளனர்.
இது தொடர்பாக, கீழச்செவல்பட்டி போலீசார் திமுக நிர்வாகி நாரயணன் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் யாரையும் கைது செய்யவில்லை.
இதனால் வருவாய்த்துறை அலுவலர்கள், திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடத்தினர். மேலும், திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் அனைத்து ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
வட்டாச்சியர் விஜயராணி மீது தாத்குதல் நடத்தியவர்கள் மீது நவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாவட்டம் முழுவதும் வருவாய்த்துறை ஊழியர்கள், வருவாய்த் தணிக்கையை புறக்கணிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications