ஓமன் நாட்டை தாக்கிய 'பெட்'-இந்தியர் உள்பட 2 பேர் பலி
மஸ்கட்: 'பெட்' புயல் ஓமன் நாட்டை தாக்கியதில் இந்தியர் உள்பட 2 பேர் பலியாயினர்.
அரபிக் கடலில் உருவன 'பெட்' புயல் முதலில் வடக்கு நோக்கி நகர்ந்து குஜராத் மாநிலம் கட்ச் பகுதியை அச்சுறுத்தியது. அங்கு கரையைக் கடக்கும் என்ற எதிர்பார்க்கப்பட்டது.
புயல் குஜராத் அருகே நெருங்கியபோது அங்கு பயங்கர சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. கடற்கரை மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் இருந்து சுமார் 12,000 பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு பெய்த பலத்த மழைக்கு 8 பேர் உயிரிழந்தனர்.
இந் நிலையி்ல் புயல் அங்கிருந்து திசைமாறி மேற்கு நோக்கி நகர்ந்து பாகிஸ்தானின் கராச்சியை நோக்கி சென்றது. பின்னர் மீண்டும் தென் மேற்காக நகர்ந்து நேற்று ஓமன் நாட்டைத் தாக்கியது.
துறைமுக நகரமான அல்-பாகியில் 120 கி.மீட்டர் வேகத்தில் மிக பலத்த காற்றுடன் கூடிய மழை கொட்டியது.
இதனால் அங்கு எண்ணெய் எடுக்கும் பணி அடியோடு பாதிக்கப்பட்டது. விளக்கு கம்பங்கள் சரிந்ததில் ஒரு இந்தியர் உள்பட 2 பேர் பலியாயினர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எண்ணெய், இயற்கை எரிவாயு துரப்பன தொழிற்சாலைகள் மூடப்பட்டன.
பலத்த மழை கொட்டியதால் சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
தற்போது பெட் புயல் ஓமனில் வடகிழக்கு கடற்கரை பகுதிக்கு நகர்ந்துள்ளது. அது இப்போது வலுவடைந்து வருவதாகத் தெரிவி்க்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications