அப்சல் குருவின் கருணை மனு குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படவில்லை - டெல்லி அரசிடமே உள்ளது!

இதுகுறித்து குடியரசுத் தலைவர் மாளிகை அதிகாரி ஒருவர் கூறுகையில், அப்சல் குருவின் கருணை மனு இன்னும் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வரவே இல்லை. எங்களது ஆவணங்களின்படி, அது தற்சமயம், டெல்லி அரசிடமே உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 49 மரண தண்டனைக் கைதிகளிடமிருந்து 27 கருணை மனுக்கள் இதுவரை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு வந்து, அவரது பரிசீலனைக்காக காத்துள்ளன.
இதில் அப்சல் குரு மற்றும் கர்நாடகத்தைச் சேர்ந்த பந்து திடாக் ஆகியோரின் கருணை மனுக்களை மத்திய உள்துறை அமைச்சகம் பரிசீலனை செய்து வருகிறது. இவைதொடர்பாக சம்பந்தப்பட்ட மாநில அரசுகளிடம் உள்துறை அமைச்சகம் பல்வேறு விளக்கங்களைக் கேட்டுள்ளது.
அப்சல் குருவுக்கு 2002ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதி மரண தண்டனை விதிக்கப்பட்டது. இது பின்னர் 2003ம் ஆண்டு அக்டோபர் 29ம் தேதி டெல்லி உயர்நீதிமன்றத்திலும், 2005ம் ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி உச்சநீதிமன்றத்திலும் உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர் குருவின் குடும்பத்தினர் அப்சல்குரு சார்பில் கருணை மனுவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பினர்.
சட்டமுறைப்படி, அதை உள்துறை அமைச்சகம் ஆய்வு செய்து, டெல்லி அரசின் கருத்தைக்கேட்டு பின்னர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இதுகுறித்து குடியரசுத் தலைவர் மாளிகை அதிகாரி மேலும் கூறுகையில், வெறும் மனுவை வைத்துக் கொண்டு குடியரசுத் தலைவர் கருணை மனுக்கள் மீது முடிவெடுக்க மாட்டார். மனு கிடைத்தவுடன், அது உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்படும்.
உள்துறை அமைச்சகம்,சம்பந்தப்பட்ட மாநில அரசின் கருத்தை கேட்டு அதன் அடிப்படையில் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைக்கு்ம். அதன் பிறகுதான் குடியரசுத் தலைவர் கருணை மனு மீது முடிவெடுப்பார்.
ஒரு கருணை மனு மீது உள்துறை அமைச்சகத்திடமிருந்து எந்தப் பதிலும் வராமல் இருந்தால், அந்தமனு மீது குடியரசுத் தலைவர் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டார்.
தற்போது குடியரசுத் தலைவர் முன்பு 25 மனுக்கள் நிலுவையில் உள்ளன. இவற்றை வரிசைக்கிரமப்படிதான் குடியரசுத் தலைவர் பரிசீலிக்க முடியும். இவற்றைப் பரிசீலித்து முடிவெடுக்க குறிப்பிட்ட காலக்கெடு எதுவும் குடியரசுத் தலைவருக்கு இல்லை. அரசியலமைப்புச் சட்டத்தில் அதற்கு வழி இல்லை. மேலும், கருணை மனு மீது முடிவெடுக்குமாறு குடியரசுத் தலைவரை யாரும் கட்டாயப்படுத்தவும் முடியாது என்றார்.
தற்போதைய நிலவரப்படி அப்சல் குரு விவகாரத்தில் எப்போது முடிவு வரும் என்பது பெரும் குழப்பமாகவே உள்ளது
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications