சங்கரன்கோவில் அருகே கோஷ்டி மோதல் -ஒருவர் கொலை-பதற்றம்
சங்கரன்கோவில் சங்கரன்கோவில் அருகே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் விவசாயி கொல்லப்பட்டார். இதுதொடர்பாக பஞ்சாயத்துத் தலைவர் உள்பட 15 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
சங்கரன்கோவில் தாலுகா திருவேங்கடம் அருகே உள்ளது மைப்பாறை கிராமம். இங்கு கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது தற்போதைய பஞ்சாயத்துத் தலைவர் ராமலிங்கசாமி என்ற துரைராஜ் தலைமையில் ஒரு கோஷ்டியும், முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் ரங்கராஜ் தலைமையில் ஒரு கோஷ்டியும் செயல்பட்டனர்.
இந்த கோஷ்டிகளுக்கு இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த மாதம் பஞ்சாயத்து தலைவர் ராமலிங்கம் ஆதரவாளரான அழகர்சாமி என்பவரது மனைவிக்கு மைப்பாறை பள்ளியில் ஆசிரியர் பணி வழங்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரங்கராஜ் ஆதரவாளர் ரவிசந்திரன் மேலிடத்தில் கூறி அவருக்கு பணி கிடைக்க விடாமல் தடுத்து விட்டார். இதை தொடர்ந்து அழகர்சாமி தரப்புக்கும், ரவிசந்திரன் தரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக திருவேங்கடம் போலீசில் வழக்கு உள்ளது.
இந்நிலையில் நேற்றிரவு 7 மணி அளவில் ரவிசந்திரன் தோட்டத்தில் இருந்து வந்து கொண்டிருந்தார். அப்போது 15 பேர் கும்பல் இரும்பு கம்பிகளுடன் வழிமறித்து அவரை சராமரியாக தாக்கியது. இதில் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்த ரவிசந்திரன் அதே இடத்தில் இறந்தார். உடனே அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது.
தகவல் அறிந்ததும் சங்கரன்கோவில் டிஎஸ்பி சண்முகம், இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி ஜெயசில், ஜெயசந்திரன், ஆதிலிங்கபோஸ் மற்றும் போலீசார் அங்கு சென்றனர். அப்போது அப்பகுதி மக்கள் ரவிசந்திரன் உடலை எடுக்க விடாமல் போலீசார தடுத்தனர். கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் உறுதி அளித்த பின் ரவிசந்திரன் உடலை கொடுத்தனர். அதை அவர்கள் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக அழகர்சாமி, கண்ணன், முத்தால்ராஜ், ஜெயராமன், புஷ்பராஜ், ராஜேந்திரன், பஞ் தலைவர் ராமலிங்கசாமி, திருநாராயணமூர்த்தி, பால்ராஜ், திருமூர்த்தி, போத்திராஜ், ஆதிராஜ், சீனிவாசன் உள்பட 15 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுளளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications