தமிழகத்தில் 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பரவலாக மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் வெயிலில் தகித்து வரும் தமிழக மக்களுக்கு லேசான நிம்மதி பிறந்துள்ளது.
தென் மாவட்டங்களின் பல பகுதிகளில் 2 நாட்களாக நல்ல மழை பெய்துள்ளது. தலைநகர் சென்னையிலும் நேற்றும் இன்றும் பரவலாக மழை பெய்துள்ளது.
இதன் காரணமாக வெப்பம் கணிசமாக குறைந்துள்ளது. இந்த மழை அடுத்த 24 மணி நேரத்திற்கு நீடிக்கும் என வானிலைஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை முன் அறிவிப்பில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications