முன்னாள் அதிமுக அமைச்சர் முத்துச்சாமி திமுகவில் இணைந்தார்
சென்னை: முன்னாள் அமைச்சர் எஸ்.முத்துச்சாமி என்று முதல்வர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
எம்.ஜி.ஆர். காலத்தில் அமைச்சராக இருந்தவர் முத்துச்சாமி. அதிமுக உடைந்தபோது ஜானகி அணியில் இடம் பெற்றிருந்தார். பின்னர் ஜானகி அணியும், ஜெ. அணியும் இணைந்தபோது முத்துச்சாமியும் ஜெயலலிதா தலைமையை ஏற்று அரசியல் நடத்தி வந்தார்.
ஆனால் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த செங்கோட்டையனை மட்டும் உயர்வாக நடத்தி வந்த ஜெயலலிதா, அதே மாவட்டத்தைச் சேர்ந்த முத்துச்சாமியை ஓரம் கட்டி ஒதுக்கி வைத்தார்.
இருப்பினும் அதிமுக அமைப்புச் செயலாளர் பதவியைக் கொடுத்து வைத்திருந்தார். இந்த நிலையில், சமீபத்தில் முத்துச்சாமி திமுகவில் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகின.இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
முத்துச்சாமி தனது பிரச்சினைகளை என்னிடம் கூறலாம், என்னை நேரில் சந்தித்துப் பேசலாம் என்று அழைத்தார் ஜெயலலிதா. ஆனால் அதை நிராகரித்த முத்துச்சாமி, ஜெயலலிதாவுக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.அதில், ஜானகி அணியினர் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதை குறித்து விளக்கியிருந்தார்.
இந்த நிலையில் இன்று தனது ஆதரவாளர்களுடன் அண்ணா அறிவாலயம் வந்த முத்துச்சாமி,முதல்வர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
-
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications