தூத்துக்குடி அருகே கார் மீது லாரி மோதி 5 பேர் பலி
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே கார் மீது லாரி மோதியதில் 5 பேர் பலியாயினர்.
தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்த நாகூர் கனி தனது குடும்பத்தினருடன் நேற்று தருவைகுளத்தில் நடந்த நிகழ்ச்சிக்காக டாடா சுமோவில் சென்றார்.
விழாவில் பங்கேற்று விட்டு அனைவரும் மீண்டும் தூத்துக்குடிக்கு திரும்பி கொண்டிருந்தனர். சுமோவை திரேஸ்புரத்தை சேர்ந்த சீனி முகமது என்பவர் ஓட்டி வந்தார்.
பட்டினமருதூர் அருகே சென்றபோது தூத்துக்குடியில் இருந்து வந்த லாரி சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தவரை இடித்துத் தள்ளிவிட்டு எதிரே வந்த நாகூர் சுமோ மீதும் மோதியது.
இதில் சைக்களிலில் சென்ற சவேரியர்புரத்தை சேர்ந்த தொழிலாளி பாக்கியம் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் காரில் இருந்த நாகூர் கனியின் மனைவி ஜீனத் பீவி, அவரது மகன் கசாலி ஆகியோரும் பலியாயினர்.
படுகாயமடைந்த நாகூர் கனி, கசாலி மனைவி செய்யது அலி, கார் டிரைவர் சீனி முகமது ஆகியோர் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் சீனி முகமது, செய்யது அலி ஆகியோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தனர்.
நாகூர் கனி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தகவல் அறிந்ததும் தூத்துக்குடி எஸ்பி செந்தில்குமார், ஏஎஸ்பி அனில்குமார் கிரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் விபத்திற்கு காரணமான லாரி தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் இரு்ந்து ராமநாதபுரத்திற்கு சாம்பல் ஏற்றிச் சென்றது தெரிய வந்தது. தப்பி ஓடிய லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த விபத்தில் காயமடைந்தவர்களை மீ்ட்பதற்காக தூத்துக்குடி அதிரடிபடை வேன் விபத்து நடந்த இடத்திற்கு சென்று கொண்டிருந்தது. தருவைகுளம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது வேன் கவிழ்ந்தது. இதில் 10க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்தனர். அவர்கள் தூத்துக்குடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications