ரஞ்சிதா-நித்யானந்தா சி.டி. உண்மையானதே:சிஐடி போலீஸ்
பெங்களூர் அருகே பிடுதியில் ஆசிரமம் நடத்தி வந்த நித்யானந்தா நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருக்கும் ஆபாச காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியானதை தொடர்ந்து இருவரும் தலைமறைவாயினர்.
இதையடுத்து தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் நித்யானந்தா மீது பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இமாசலப் பிரதேசத்தில் தலைமறைவாக இருந்த நித்யானந்தாவை கடந்த ஏப்ரல் 22ம் தேதி பெங்களூர் சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். இன்று அவருக்கு ஜாமீனும் கிடைத்துவிட்டது.
ஆனால், ரஞ்சிதா தான் தொடர்ந்து தலைமறைவாகவே இருந்து வருகிறார்.
இந் நிலையில், கர்நாடக சி.ஐ.டி. போலீஸ் ஐ.ஜி. சரண் ரெட்டி பெங்களூரில் நிருபர்களிடம் பேசுகையில்,
நடிகை ரஞ்சிதாவுடன் நித்யானந்தா படுக்கை அறையில் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் அடங்கிய சி.டி., ஹைதராபாத்தில் உள்ள தடயவியல் பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு நடைபெற்ற ஆய்வில், அந்த சி.டி. உண்மையானதுதான் என்றும், திருத்தப்பட்ட சி.டி. அல்ல என்றும் உறுதியாகியுள்ளது. போலி சிடி அல்ல என்று அறிக்கை கிடைத்துள்ளது.
இதுபற்றி ராம்நகர் மாவட்ட நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளோம்.
நடிகை ரஞ்சிதாவிடம் விசாரணை நடத்த திட்டமிட்டு, அவருக்கு பலமுறை நோட்டீஸ் அனுப்பியிருக்கிறோம். ஆனால் அவர் இன்னும் விசாரணை அதிகாரி முன் ஆஜராகவில்லை. இந்த வழக்கில் அவர் குற்றவாளி அல்ல. இருப்பினும் அவர் போலீஸார் முன்வந்து வாக்குமூலம் அளிப்பார் என்று உறுதியாக நம்புகிறோம் என்றார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்













Click it and Unblock the Notifications