10 மாஜி எம்எல்ஏக்களுடன் திமுகவில் சேர்ந்த முத்துச்சாமி

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முத்துச்சாமி சமீபத்தில் முதல்வர் கருணாநிதியை சந்தித்தார்.
இந் நிலையில் இன்று முறைப்படி தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார். அண்ணா அறிவாலயத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் 10 முன்னாள் அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் சுமார் 15,000 தொண்டர்களுடன் இன்று திமுகவில் இணைந்தார் முத்துச்சாமி.
இந்த திமுகவில் சேரும் முன்னாள் எம்.எல்.ஏக்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர் பர்கூர் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ ராஜேந்திரன்.
இவர் திமுகவில் இணைவது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில்,
1989 ம் ஆண்டு ஜெயலலிதா அணி சார்பில் சேவல் சின்னத்தில் பர்கூர் தொகுதியில் போட்டியிட்டேன். அதில் வெற்றிபெற்று தொகுதி மக்களுக்கு பணியாற்றினேன். மீண்டும் எனக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
இதனால் தமிழக முதல்வர் மு.கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், முன்னாள் அமைச்சர் முத்துசாமி தலைமையில் சனிக்கிழமை 500 பேருடன் திமுகவில் இணைகிறேன் என தெரிவித்துள்ளார்.
ஜானகி அணியைச் சேர்ந்தவர்களைத்தான் ஜெயலலிதா புறக்கணிப்பதாக அதிமுகவில் குமுறல் இருந்து வந்தது. ஆனால் அதிமுக உடைந்து, ஜெயலலிதா தலைமையிலான அதிமுக சார்பில், சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தனது தீவிர ஆதரவாரும் திமுகவுக்குத் தாவுவது அதிமுக நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications