பேரணி ரயில் நிலைய ரயில் பாதை தகர்ப்பு - ரயில் நேரங்கள் மாற்றம்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் பேரணி ரயில் நிலையப் பகுதியில் ரயில் பாதையை சிலர் குண்டு வைத்துத் தகர்த்த சம்பவத்தைத் தொடர்ந்து பல்வேறு ரயில்களின் நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டன.
தற்போது தண்டவாளம் சரி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தப் பாதையில் ரயில்கள் மெதுவாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு தேங்கி நிற்கும் ரயில்கள் சென்று கொண்டிருக்கின்றன. ரயில்கள் போன பின்னர் தண்டவாளம் முழுமையாக சீரமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தண்டவாளம் தற்காலிகமாக சரி செய்யப்பட்டவுடன் விபத்திலிருந்து அதிர்ஷ்டவசமாக தப்பிய மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் சென்றது. பின்னர் ஒவ்வொரு ரயிலாக செல்லத் தொடங்கின.
ரயில்கள் அனைத்தும் தாமதமாக வந்ததால் சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்களின் நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
வைகை எக்ஸ்பிரஸ் மதியம் 12.30 மணிக்கு பதில் 1.40 மணிக்கு புறப்படும். அனந்தபுரி எக்ஸ்பிரஸ் இரவு 7.15 க்கு பதில் 8.20 மணிக்கும், செங்கோட்டை சிறப்பு ரயில் இரவு 8.20 மணிக்கு பதிலாக இரவு 11.30 மணிக்கும் புறப்படும் என்று தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.












Click it and Unblock the Notifications