விழுப்புரம் ரயில் பாதை தகர்ப்பு: எல்டிடிஇ ஆதரவாளர்கள் காரணமா?

இன்று அதிகாலையில் நடந்த இந்த சம்பவத்திற்கு விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவாளர்கள்தான் இதற்குக் காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இன்று அதிகாலை 2.10 மணியளவில் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் பேரணி ரயில் நிலையத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. அப்போது ரயில் நிலைய தண்டவாளத்தில் திடீரென குண்டு வெடித்தது. இதில் தண்டவாளம் வெடித்துச் சிதறியது.
இதையடுத்து ரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டர் மலைக்கோட்டை ரயில் டிரைவரை எச்சரித்து வண்டியை நிறுத்தச் செய்தார். இதையடுத்து ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
விரைந்து வந்த போலீஸார் குண்டுவெடிப்பு நடந்த இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்து ராஜபக்சே வருகையைக் கண்டிக்கும் துண்டுப் பிரசுரங்கள் கிடந்ததைப் பார்த்த போலீஸார் அதை மீட்டனர்.
குண்டுவெடிப்பு காரணமாக அப்பாதையில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னைக்கு வந்து கொண்டிருந்த பல ரயில்கள் ஆங்காங்கு நிறுத்தப்பட்டன அல்லது மாற்றி விடப்பட்டன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications