பெரும் பலத்துடன் மீண்டும் தொலைத்தொடர்புத் துறையில் ரிலையன்ஸ் நிறுவனம்!

உள்ளங்கையில் உலகம் என்ற பஞ்ச் லைனுடன் தொலைத் தொடர்புத்துறையில் அடியெடுத்து வைத்த ரிலையன்ஸ் நிறுவனம், பெரும் புரட்சியையே ஏற்படுத்தியது. பின்னர் தம்பி அனில் அம்பானியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பாகப்பிரிவினை ஏற்பட, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் அனில் வசம் போய்விட்டது.
அத்துடன், ஒருவரது வர்த்தகத்தில் மற்றவர் குறுக்கிடக் கூடாது என்ற குடும்ப ஒப்பந்தம் இருந்ததால், முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தொலைத் தொடர்புத் துறையில் இறங்காமல் இருந்துவந்தது.
சமீபத்தில் கேஜி எரிவாயு தொடர்பான வழக்கின் தீர்ப்பு, அண்ணன் - தம்பிக்கிடையிலான சண்டைக்கு முடிவு கட்டியது. இப்போது குடும்ப ஒப்பந்தத்தை கிழித்துப் போட்டுவிட்டு, விரும்பிய தொழிலில் விருப்பம் போல் ஈடுபடலாம் என்ற புதிய ஒப்பந்தத்தை முகேஷும் அனிலும் ஏற்படுத்திக் கொண்டுள்ளனர்.
இந்த இணக்கமான சூழலில் மீண்டும் தொலைத் தொடர்புத் துறையில் கால்பதிக்கிறது முகேஷின் ரிலையன்ஸ்.
இதன் முதல் கட்டமாக இன்போடெல் நிறுவனத்தின் 95 சதவிகிதப் பங்குகளை ரூ 4800 கோடிக்கு வாங்கியுள்ளார் முகேஷ்.
சமீபத்தில் நடந்த 3 ஜி பிராட்பேண்ட் ஏலத்தில் 22 பகுதிகளுக்கான உரிமத்தை ஏலத்தில் வென்றுள்ளது இன்போ டெல். அதே நேரம் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் இந்த ஏலத்திலிருந்து வெளியேறிவிட்டது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம், நாட்டின் பெரும்பகுதி பிராட்பேண்ட் சேவை தரும் உரிமம் இன்போடெல் நிறுவனம் மூலம் முகேஷுக்குக் கிடைத்துள்ளது. எனவே செல்போன் மற்றும் பிராட்பேண்ட் இணைப்பு தருவதில் பெரும் பலத்துடன் நுழையவிருக்கிறது ரிலையன்ஸ் நிறுவனம்.
மேலும் அடுத்து வரவிருக்கிற 4ஜி ஸ்பெக்ட்ரம் தொழில்நுட்பத்தைப் பெறுவதற்கான முயற்சிகளிலும் ரிலையன்ஸ் தீவிரமாக உள்ளது.
இதுகுறித்து முகேஷ் அம்பானி கூறுகையில், "இந்திய பொருளாதாரம் டிஜிட்டல் துறையில் பெரும் முன்னேற்றம் காணவும், வாடிக்கையாளர்கள் பெரும் திருப்தியுடன் பிராட்பேண்ட் சேவைகளைப் பெறவும் வழிவகுக்கும்" என்றார்.
இந்த எதிர்ப்பார்ப்பு காரணமாக, ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகள் கடந்த வெள்ளியன்று 3 சதவிகிதம் உயர்ந்தன. நாளை இன்னும் உயர வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications