பெரியாறு அணை - தமிழக, கேரள அரசுகள் 1 மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையை ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் 5 பேர் கொண்ட ஆய்வுக் குழுவை அமைத்துள்ளது. இதன் தலைவராக உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் உள்ளார்.
தமிழகம் சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணனும், கேரளா சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி. தாமசும் இந்த குழுவில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது தவிர, மத்திய நீர்வள ஆணையத்தை சேர்ந்த முன்னாள் தலைவர்கள் 2 பேர் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர்.
இந்த ஆய்வுக் குழுவின் முதல் கூட்டம் கடந்த மாதம் 25ம் தேதி டெல்லியில் நடப்பதாக இருந்தது. அப்போது, கேரள உறுப்பினர் கே.டி. தாமசின் சகோதரர் மரணம் அடைந்ததால், அவரால் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாமல் போனது. அதனால், அந்த கூட்டம் ஜூன் 14ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இதன்படி, டெல்லியில் உள்ள மத்திய நீர்வள ஆணைய விருந்தினர் இல்லத்தில் இந்த கூட்டம் இன்று தொடங்கியது.
கூட்டம் கிட்டத்தட்ட 2 மணி நேரம் நடந்தது. கூட்டம் முடிந்த பின்னர் வெளியே வந்த தமிழகப் பிரதிநிதியான ஏ.ஆர்.லட்சுமணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், முல்லை பெரியார் அணை உயர்மட்டக் குழு அடுத்த கூட்டம் ஆகஸ்ட் 23ல் நடைபெறும். தங்கள் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய இரு மாநிலங்களுக்கும் ஒரு மாத கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இரு மாநிலஅரசுகளும் அறிக்கை அளித்த பின்னர் அது குறித்து ஆகஸ்ட் 23ம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்தில் விவாதிக்கப்படும். அதன் பிறகு அணையை எப்போது நேரில் பார்வையிடுவது என்பது குறித்து கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
டெல்லி: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக ஆய்வு நடத்த உச்சநீதிமன்றம் அமைத்துள்ள ஐந்து பேர் கொண்ட குழுவின் முதல் உயர்மட்டக் குழுக் கூட்டம் டெல்லியில் இன்று தொடங்கியது.
முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையை ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் 5 பேர் கொண்ட ஆய்வுக் குழுவை அமைத்துள்ளது. இதன் தலைவராக உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் உள்ளார்.
தமிழகம் சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணனும், கேரளா சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி. தாமசும் இந்த குழுவில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது தவிர, மத்திய நீர்வள ஆணையத்தை சேர்ந்த முன்னாள் தலைவர்கள் 2 பேர் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர்.
இந்த ஆய்வுக் குழுவின் முதல் கூட்டம் கடந்த மாதம் 25ம் தேதி டெல்லியில் நடப்பதாக இருந்தது. அப்போது, கேரள உறுப்பினர் கே.டி. தாமசின் சகோதரர் மரணம் அடைந்ததால், அவரால் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாமல் போனது. அதனால், அந்த கூட்டம் ஜூன் 14ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இதன்படி, டெல்லியில் உள்ள மத்திய நீர்வள ஆணைய விருந்தினர் இல்லத்தில் இந்த கூட்டம் இன்று தொடங்கியது.
கூட்டம் கிட்டத்தட்ட 2 மணி நேரம் நடந்தது. கூட்டம் முடிந்த பின்னர் வெளியே வந்த தமிழகப் பிரதிநிதியான ஏ.ஆர்.லட்சுமணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், முல்லை பெரியார் அணை உயர்மட்டக் குழு அடுத்த கூட்டம் ஆகஸ்ட் 23ல் நடைபெறும். தங்கள் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய இரு மாநிலங்களுக்கும் ஒரு மாத கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இரு மாநிலஅரசுகளும் அறிக்கை அளித்த பின்னர் அது குறித்து ஆகஸ்ட் 23ம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்தில் விவாதிக்கப்படும். அதன் பிறகு அணையை எப்போது நேரில் பார்வையிடுவது என்பது குறித்து கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2.5 அடி உயர்வு:
இந் நிலையில் பெரியாறு அணை நீர்பிடிப்புப் பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் இரண்டரை அடி உயர்ந்தது.
ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 110.50 அடியில் இருந்து இரண்டரை அடி உயர்ந்து 113 அடியானது.
அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,523 கன அடியாக உள்ளது. தேனி மாவட்ட குடிநீருக்காக வினாடிக்கு 20 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!

Click it and Unblock the Notifications