அரசு விழாவில் காஞ்சிபுரம் கலெக்டரின் பர்ஸ் திருட்டு!
காஞ்சிபுரம்: சென்னை அருகே குன்றத்தூரில், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்ட அரசு விழாவில் பங்கேற்ற காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தோஷ் மிஸ்ராவின் பர்ஸை சிலர் சுட்டு விட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையை அடுத்த குன்றத்தூரில் நேற்று முன்தினம் ஊராட்சி ஒன்றிய பள்ளி சீரமைப்பு கட்டிடம் திறப்பு விழா நடந்தது. இந்த விழாவில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
விழா முடியப் போகும் நேரத்தில் சந்தோஷ் மிஸ்ரா பரபரப்பாக காணப்பட்டார். கேட்டபோது தனது பர்ஸைக் காணவில்லை என்றார். மேடையிலும் தேடிப் பார்த்தார். ஆனால் பர்ஸ் கிடைக்கவில்லை.
கலெக்டரின் பர்ஸைக் காணவில்லை என்பதை கேட்ட போலீஸாரும், அதிகாரிகளும் கூட சேர்ந்து தேடிப் பார்த்தனர். இரவு 11 மணியாகியும் பர்ஸ் கிடைக்கவில்லை.
கலெக்டருக்கான அடையாள அட்டை, கிரடிட் கார்டுகள் உள்ளிட்ட பல அந்த பர்ஸில் இருந்ததாம். இதனால்தான் கலெக்டர் பதறிப் போய் விட்டார். பர்ஸ் கிடைக்காததால் விரக்தியுடன் கலெக்டர் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.
கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பிக்பாக்கெட் திருடர்கள் கலெக்டரின் பர்ஸை களவாடியிருக்க வேண்டும் என சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்து கலெக்டர் போலீஸில் புகார் ஏதும் தரவில்லை.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications