மாயமானதாக கூறப்பட்ட 1445 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் கண்டுபிடிப்பு
திருச்சி: காணாமல் போனதாக கூறப்பட்ட திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 11 பள்ளி மாணவ, மாணவிகளின் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களை, சென்னையிலிருந்தே அனுப்பி வைக்காதது தெரிய வந்துள்ளது. இதையடுத்து நேற்று இரவு அனுப்பி வைக்கப்பட்ட அந்த சான்றிதழ்கள் இன்று காலை மாணவ, மாணவியரிடம் வழங்கப்பட்டன.
நேற்று பத்தாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் தமிழகம் முழுவதும் பள்ளிகளில் வழங்கப்பட்டன. இந்தநிலையில் திருச்சி கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த 11 பள்ளிக்கூடங்களுக்கான சான்றிதழ்கள் மட்டும் வரவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவ, மாணவியர் வீடுகளுக்கு தகவல் அனுப்பினர். இதைத்தொடர்ந்து பள்ளிகளில் பெற்றோர்கள் குவிந்து விட்டனர். மதிப்பெண் சான்றிதழ் என்ன ஆனது என்று பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களிடம் கேட்டனர். ஆனால் அவர்கள் சரிவர பதிலளிக்கவில்லை.
அதேசமயம், இந்த பள்ளிகளைச் சேர்ந்த தலைமை ஆசிரியர்களும், ஆசிரியர்களும், மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு சான்றிதழ் குறித்து கேட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த விவகாரம் குறித்து திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கே.சுவாமிநாதன் கூறுகையில், சம்பந்தப்பட்ட பள்ளிகளின் மதிப்பெண் சான்றிதழ் அடங்கிய கட்டு மட்டும் எங்களுக்கு வரவில்லை. இதுகுறித்து தேர்வுகள் துறை இயக்குநரகத்திடம் தகவல் தந்துள்ளோம். விசாரணை [^] நடந்து வருகிறது என்றார்.
இந்த நிலையில் இதுதொடர்பாக நடந்த விசாரணையில், சென்னையிலிருந்தே இந்த மதிப்பெண் சான்றிதழ்கள் அனுப்பி வைக்கப்படாதது தெரிய வந்தது. இதையடுத்து நேற்று இரவு அவை அனைத்தும் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டன. இதையடுத்து இன்று காலை மாணவ, மாணவியருக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications