தியாகியை அவமதிப்பதா?-இந்து முன்னணிக்கு கைவினைஞர்கள் கண்டனம்
கரூர்: சுதந்திர போராட்ட தியாகி முத்துச்சாமி ஆசாரியாரை அவமதித்த இந்து முன்னணிக்கு அகில இந்திய கைவினைஞர் முன்னேற்றக் கழகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கரூரில் வரும் ஜூன் 20-ம் தேதி இந்து முன்னணி சார்பில் இந்து சம உரிமை மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் விளம்பர பலகை கரூர் தாலுக்கா அலுவலகம் முன்பு வைக்கப்பட்டுள்ளது.
சுதந்திர போராட்ட தியாகி பாரதியார், வ.உ.சிதம்பர பிள்ளை, வரதராஜூலு நாயுடு, கர்ம வீரர் காமராஜர், முத்துசாமி ஆசாரியார் ஆகியோர் படங்களோடு அவர்கள் பெயர்களும் இந்த விளம்பரப் பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இதில் முத்துசாமி ஆசாரியாரின் பெயர் முத்துசாமி ஆசாரி என்று ஒருமையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அகில இந்திய கைவினைஞர் முன்னேற்றக் கழகம் குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து அகில இந்திய கைவினைஞர் முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் விசு. சிவக்குமார் கூறகையில், முத்துசாமி ஆசாரியார் ஒரு சுந்திர போராட்ட தியாகி. அவர் வரலாற்றையும், தியாகத்தையும் சிலர் திட்டமிட்டு மறைத்துவிட்டனர். ஆகவே, இன்றைய தலைமுறையினர் அவரைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள வாய்ப்பு இல்லை.
இந்த நிலையில் முத்துசாமி ஆசாரியார் அவர்களை ஆசாரி என்று ஒருமையில் குறிப்பிட்டுள்ளது வேதனை அளிக்கின்றது. அதுவும் சுதந்திர போராட்ட தியாகியை இப்படி குறிப்பிட்டு அவமானப்படுத்தக் கூடாது. எனவே, அவரது பெயரை முறையாகக் குறிப்பிட வேண்டும். மேலும் அந்த விளம்பரப் பலகையை உடனே அகற்றவில்லை எனில் இந்து முன்னணி மாநாடு நடக்கும் போது போராட்டம் நடத்த வேண்டி வரும் என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications