ஸ்வைன்: தனி அறையில் சிகிச்சை-தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பன்றிக் காய்ச்சல் நோய்க்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளை தனி அறையில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வெளியிட்ட செய்தி அறிக்கை:

கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு பன்றிக் காய்ச்சல் பரவாமல் தடுக்க தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. தமிழக-கேரள எல்லைப் பகுதிகளில் பயணிகளை பரிசோதிக்க மருத்துவர்கள் குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை கிண்டியிலுள்ள கிங் நிலையம், சென்னை அரசு பொது மருத்துவமனை மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்பது தனியார் பரிசோதனை நிலையங்களில் பன்றிக் காய்ச்சல் பரிசோதனை செய்யப்படும்.

சென்னையில் உள்ள ஹைடெக் டயக்னோடிக் சென்டர், டயக்னோஸ்டிக் சர்வீசஸ், ஸ்ரீராமச்சந்திரா மெடிக்கல் சென்டர், பாரத் ஸ்கேன்ஸ், லிஸ்டர் மெட்ரோ பாலிஸ் லேப், திருச்சியில் உள்ள மரு.ராத்ஸ் லேப், கோவையில் உள்ள மைக்ரோ லேப், இம்யூனோ ஆம்சிலரி கிளினிக்கல் சர்வீஸஸ், நாகர்கோவிலில் உள்ள விவேக் லெபாரேட்டரி ஆகிய 9 தனியார் பரிசோதனை நிலையங்களுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.

பன்றிக் காய்ச்சல் அறிகுறியுடன் தனியார் மருத்துவமனைகளுக்கு வருபவர்களை தனி அறையில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும். மேலும், அப்படி வரும் நோயாளிகளின் விவரங்களை அப்பகுதி மாவட்ட சுகாதார துணை இயக்குநர்களுக்கும், சென்னை பொது சுகாதாரத் துறை இயக்குநருக்கும் தெரிவிக்க வேண்டும். இவர்களிடம் இந்த நோய்க்கான டாமி ப்ளூ மாத்திரைகள் உள்ளன. மருந்துக் கடைகளுக்கு இந்த மருந்தை விற்கும் உரிமம் மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரால் அளிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+