நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை தனியாரிடம் விற்க மத்திய அரசு திட்டம்-வைகோ

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்திய பொதுத்துறை நிறுவனங்களில் 'நவரத்னா' பட்டியலில் இடம் பெறும் அளவுக்கு நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் வளர்ச்சி பெற்றுள்ளது.
என்.எல்.சி. நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை விற்க, 2002ம் ஆண்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு முயற்சி செய்த நேரத்தில், நாடாளுமன்றத்திலும், முன்னாள் பிரதமர் வாஜ்பாயிடமும் மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் கடும் எதிர்ப்புத் தெரிவித்தேன்.
அன்றைய பிரதமர் வாஜ்பாய் தமிழக மக்களின் நியாயமான உணர்வுக்கு மதிப்பு அளித்து, என்.எல்.சி. பங்குகளை விற்க மாட்டோம். தனியார் மயமாக்க மாட்டோம் எனவும் அறிவித்தார். என்.எல்.சி. தொழிலாளர்கள் நிம்மதி அடைந்தனர்.
தற்போது மத்திய நிலக்கரித்துறை இணையமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால், என்.எல்.சியின் 10 சதவீத பங்குகளை விற்று ரூ. 2,400 கோடி ரூபாய் நிதி திரட்டப்படும் என்று அறிவித்துள்ளார்.
மத்திய அரசு, என்.எல்.சி. நிறுவனத்தை படிப்படியாக தனியாரிடம் ஒப்படைக்கத் திட்டமிட்டுள்ளதை மத்திய நிலக்கரித்துறை அமைச்சரின் அறிவிப்பினால் அறிய முடிகிறது.
இல்லையெனில் ஆயிரம் கோடி ரூபாய் லாபம் தரும் என்.எல்.சி. பங்குகளை விற்பதற்கு காங்கிரஸ் அரசு தொடர்ந்து முயற்சித்து வருவது ஏன்?.
தமிழ்நாட்டு மக்களின் எதிர்ப்புகளை மீறி, என்.எல்.சி. நிறுவனத்தை தனியார் மயமாக்கிட தொடர்ந்து முயற்சித்து வரும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிப்பதுடன் என்.எல்.சி. பங்குகள் விற்கும் திட்டத்தை ரத்து செய்யுமாறு வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார் வைகோ.
நெய்வேலியில் திக ஆர்ப்பாட்டம்-கி.வீரமணி:
இந் நிலையில் நெய்வேலி நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் 30ம் தேதி திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதன் தலைவர் கி.வீரமணி அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நெய்வேலி நிறுவனத்தில் உள்ள பங்குகளை தனியாருக்கு 10 சதவீத விழுக்காடு விற்று அதன் மூலம் கிடைக்கும் ரூ. 2,400 கோடி வருமானத்தை அடைவது என்ற முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது என்ற திடுக்கிடும் செய்தி கசிந்துள்ளது.
இதைவிட தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு மிகப்பெரும் முட்டுக்கட்டையை மத்திய அரசு வேறு வகையில் போட்டுவிட முடியாது. 4 ஆண்டுகளுக்கு முன்பு (2006ல்) இப்படி ஒரு முடிவை மத்திய அரசு அதன் கூட்டணி கட்சிகளிடம் கூட கேட்காமல் எடுத்தது.
முதல்வர் கருணாநிதி காட்டிய கடும் எதிர்ப்பால் அது கிடப்பில் போடப்பட்டது. இப்போது புதைகுழிக்கு போன அந்த தீட்டம் மீண்டும் தலைநீ ட்டுகிறது. இதை தடுத்தே ஆக வேண்டும்.
முதல்வர் கருணாநிதி முயற்சி எடுத்து இந்த ஆபத்தினை முளையிலேயே கிள்ளி ஏறியும்படி செய்திடுவது மிகவும் அவசரமும், அவசியமும்.
மக்களிடையே உள்ள எதிர்ப்பினை ஒன்று திரட்டி காட்ட வருகிற 30ம் தேதி நெய்வேலியில் திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications