சங்கரராமன் கொலை வழக்கு-மேலும 3 சாட்சிகள் 'பல்டி'!
புதுச்சேரி: காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் மேலும 3 சாட்சிகள் ஜெயேந்திரர் தரப்புக்கு ஆதரவாக 'பல்டி' அடித்துள்ளனர்.
இந்தக் கொலை வழக்கு விசாரணை புதுச்சேரி அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்பட 24 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுவரை 95 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
நேற்று கோவில் கணக்கு அதிகாரி சதாசிவம், கோவில் அர்ச்சகர் நரசிம்மன், கோவில் ஊழியர் சம்பத், கோவில் கணக்காளர் சாமிநாதன், வழிகாட்டி வெங்கடாச்சாரி, வேதபாடசாலை ஆசிரியர் மாதவன், முனியம்மாள் ஆகிய 7 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதில் முனியம்மாள், வெங்கடாச்சாரி, மாதவன் ஆகியோர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர்.
எனவே இவர்கள் பிறழ் சாட்சியாக (பல்டி) பதிவு செய்யப்பட்டனர். இந்த வழக்கில் இதுவரை 82 சாட்சிகள் ஜெயேநேதிரருக்கு ஆதரவாக பல்டி அடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்ரூவர் ரவியை குற்றவாளி பட்டியலில் சேர்க்க கோரிக்கை:
முன்னதாக இந்த வழக்கில் அப்ரூவர் ஆகிவிட்ட காண்ட்ராக்டர் ரவி சுப்பிரமணியத்தை குற்றம் சாட்டப்பட்டவர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று தலைமை நீதிபதியிடம் அரசு வழக்கறிஞர் தேவதாஸ் மனு கொடுத்துள்ளார்.
அந்த மனுவில், சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் பட்டியலில் 2வது நபராக இடம் பெற்றவர் ரவி சுப்பிரமணியம். இவர் அப்ரூவராக மாறினார். அதைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டவர் பட்டியலில் இருந்து ரவி சுப்பிரமணியம் விடுவிக்கப்பட்டார்.
ஆனால், சாட்சி அளிக்கும்போது பிறழ் சாட்சி (பல்டி) அளித்தார். எனவே ரவி சுப்பிரமணியத்துக்கு வழங்கப்பட்ட மன்னிப்பை நிராகரித்து அவரை குற்றம் சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த இந்த மனுவை ஏற்கப்பட்டுள்ளது. இதையடுத்து ரவி சுப்பிரமணியத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது. இதனால் சங்கரராமன் கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications