புதுச்சேரியில் வெடிகுண்டு வீசி 2 ரெளடிகள் கொலை
புதுச்சேரி: புதுச்சேரி பாரில் வெடிகுண்டுகளை வீசி இரு ரெளடிகள் கொலை செய்யப்பட்டனர். இதையடுத்து அந்த ரெளடிகளின் உறவினர்கள் வன்முறையில் ஈடுபட்டதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.
புதுச்சேரி கோவிந்தசாலையைச் சேர்ந்த ரெளடி கழுவா செந்தில் (30). இவன் மீது 3 கொலை வழக்குகள் உள்ளன. சிறையில் இருந்த இவன் சில நாட்களுக்கு முன் ஜாமீனில் வெளியே வந்தான்.
நேற்றிரவு தனது கூட்டாளிகள் 5 பேருடன் கோவிந்தசாலையில் ஒரு ஹோட்டலின் பாரில் மது குடித்து கொண்டிருந்தான்.
அப்போது அங்கு வந்த 8 பேர் கொண்ட கும்பல் கழுவா செந்தில் மீது 3 நாட்டு வெடிகுண்டுகளை வீசியது. இதில் மூளை சிதறி கழுவா செந்தில் சம்பவ இடத்திலேயே பலியானான். அவனது கூட்டாளியான பாலாஜி (27) படுகாயமடைந்தான்.
தப்பி ஓட முயன்ற அவனை கொலை கும்பல் ஓட ஓட அரிவாளால் வெட்டி சாய்த்துவிட்டு மோட்டார் சைக்கிள்களில் தப்பிவிட்டது.
இதையடுத்து கழுவா செந்திலின் உறவினர்கள் திரண்டு வந்து ஹோட்டலை அடித்து நொறுக்கினர். மேலும், ஹோட்டல் முன் நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் இருசக்கர வாகனங்களையும் அடித்து உடைத்தது அந்த கும்பல்.
இதையடுத்து அந்தப் பகுதியில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. இன்றும் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவுவதால் கடைகள் மூடப்பட்டுள்ளன.
கோவிந்தசாலை பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த கொலைகள் குறித்து புதுவை பெரியகடை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications