ஜூன் 20-நாகர்கோவிலில் வரதட்சணை ஒழிப்பு மாநாடு!
நாகர்கோவில்: வரதட்சணை ஒழிப்புச் சட்டத்தை உறுதிபட அமல்படுத்த வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாகர்கோவிலில் ஜூன் 20 ம் தேதி வரதட்சணை ஒழிப்பு மாநாட்டை நடைபெற உள்ளது.
இந்த மாநாடு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் என்.முருகேசன் வெளியிட்டுள்ள அறிக்கை:
வரதட்சணை கொடுமை என்பது அனைத்து சமூக மக்கள் மத்தியிலும் பரவி வரும் ஒரு நோயாகும். வரதட்சனையால் இரு வீட்டாரும் பெரும் பாதிப்படைகின்றனர். இந்த நோய் நாட்டில் இருந்து அறவே ஒழிக்கப்பட வேண்டும்.
நமது பொருளாதார வளர்ச்சிப் பாதை சிலருக்கு வளர்ச்சியையும், பலருக்கு விரக்தியையும் அளித்து மனித உறவுகளை பண உறவுகளாக சுருக்கி, வன்முறையைத் தூண்டுகிற பாதையாக இருக்கின்ற காரணத்தால் தான் வரதட்சணை போன்ற சமூக குற்றங்கள் நடைபெறுகின்றது.
நுகர்வுக் கலாச்சாரம், ஆணாதிக்க கலாச்சார மதிப்பீடுகள், இவற்றை நியாயப் படுத்துகிற சமூக வடிவமைப்பு போன்றவற்றுடன் வரதட்சணைக் கொடுமையை தொடர்புபடுத்தி பார்க்க வேண்டி உள்ளது.
இந்த கொடுமையைப் போக்கிட வரதட்சணை ஒழிப்புச் சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
மேலும், வரதட்சணை ஒழிப்பு பிரிவு அதிகாரிகளை போதுமான எண்ணிக்கையில் நியமிக்க வேண்டும். குறிப்பாக அவர்களுக்கு அதிக அதிகாரங்கள் அளிக்க வேண்டும். அனைத்து திருமணங்களையும் பதிவு செய்வதை கட்டாயப்படுத்த வேண்டும். திருமணச் செலவுகளை இருவீட்டாரும் பகிர்ந்து செய்ய வேண்டும்.
மேலும், செல்வந்தர்கள், அரசியல் தலைவர்கள் என்று சமூகத்தில் கருத்துக்களை உருவாக்கும் திறன் படைத்தவர்கள் அவர்கள் வீட்டுத் திருமணங்களில் ஆடம்பரத்தை அறவே ஒழிக்க வேண்டும்.
இக் கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவிலில் ஜூன் 20 ம் தேதி (ஞாயிறுக்கிழமை) அன்று காலை முதல் மாலை வரை வரதட்சணை ஒழிப்பு மாநாடு நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில், நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களிலிருந்தும், கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்கள், பெண்கள் உள்பட ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர்.
மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் சுபாஷினி அலி, மாநிலச் செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன், எஸ்.நூர்முகமது, கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் என்.முருகேசன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொள்கின்றனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications