இந்தியாவில் 100 இடங்களில் தாக்குதல் நடத்த லஷ்கர் திட்டமிட்டது-ஹெட்லி
டெல்லி: இந்தியாவில் 100 இடங்களில் தாக்குதல் நடத்த லஷ்கர் இ தொய்பா அமைப்பு திட்டமிட்டிருந்தது என்று இந்திய விசாரணையாளர் குழுவிடம் பாகிஸ்தானிய அமெரிக்கரான டேவிட் கோல்மேன் ஹெட்லி கூறியுள்ளான்.
அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹெட்லியை சமீபத்தில் நான்கு பேர் கொண்ட இந்திய விசாரணையாளர் குழு விசாரித்தது. அப்போது இந்தியாவில் தாக்குதல் நடத்துவது தொடர்பாக லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பு போட்டிருந்த திட்டங்கள் குறித்து அவன் கூறியுள்ளான்.
இதுதொடர்பாக வெளியாகியுள்ள செய்தி...
லஷ்கர் இ தொய்பாவைச் சேர்ந்த ஏராளமான ஏஜென்டுகள் இந்தியாவின் 100 முக்கிய நகரங்களுக்குச் சென்று உளவு பார்த்தனர். முக்கிய பகுதிகளை அடையாளம் கண்டு, அவை குறித்து ஆய்வு மேற்கொண்டு புகைப்படங்களும் எடுத்தனர்.
அந்த ஏஜென்டுகள் யார், எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து எனக்குத் தெரியாது. காரணம், லஷ்கர் இ தொய்பா அமைப்பு ஒருவரைப் பற்றி மற்றவர்கள் தெரிந்து கொள்வதை விரும்பாது. அவர்கள் குறித்த தகவல்களை ரகசியமாகவே வைத்திருக்கும்.
இந்த நூறு நகரங்களில் 30 நகரங்களில் நான் உளவு பார்த்தேன். வீடியோ படம் எடுத்தேன். புகைப்படங்களும் எடுத்தேன். மும்பையும் இதில் அடக்கம். மும்பை நகர் குறித்துதாதன் நான் விரிவாக படம் எடுத்து பல்வேறு முக்கிய தகவல்களை சேகரித்தேன்.
2006-09ம் ஆண்டு காலத்தில் மொத்தம் 9 முறை நான் இந்தியாவுக்கு பயணம் செய்தேன். அத்தனையும் உளவு பார்த்து தகவல் சேகரிக்கவே என்று கூறியுள்ளான் ஹெட்லி.
மும்பை தாக்குதல் சம்பவத்தில் தனது தொடர்புகளை அமெரிக்காவின் எப்.பி.ஐயிடம் ஒப்புக் கொண்டு, கோர்ட்டிலும் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளான் ஹெட்லி என்பது குறிப்பிடத்தக்கது.
அவனை விசாரிக்க இந்தியா தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் அமெரிக்க அரசும், எப்.பி.ஐயும் கடுமையாக இழுத்தடித்து கடந்த மாதம்தான் அனுமதி கொடுத்தன. இதையடுத்து அவனை தேசிய புலனாய்வு ஏஜென்சி குழுவைச் சேர்ந்த நான்கு பேர் கொண்ட விசாரணைக் குழு 7 நாட்கள் சிகாகோவில் வைத்து ஹெட்லியிடம் விசாரணை நடத்தியது என்பது நினைவிருக்கலாம்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications