சிறுதாவூர் ஏரியில் ஆக்கிரமிப்புகள்-போலீஸ் பாதுகாப்புடன் அகற்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை அருகே உள்ள சிறுதாவூர் கிராமத்தில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலத்திற்கு அருகே ஏற்படுத்தப்பட்டிருந்த ஆக்கிரமிப்பை அதிகாரிகள் அகற்றினர்.
திருப்போரூரை அடுத்த சிறுதாவூர் கிராமத்தில் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் சுமார் 240 ஏக்கர் நிலம் உள்ளது. இங்கு தொல்லியல்துறை சார்பில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன.
அங்குள்ள ஏரியை ஒட்டியுள்ள சுமார் 35 ஏக்கர் நிலத்தில் சமீப காலமாக உள்ளுரைச்சேர்ந்த சிலர் பிளாட் போட்டு விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. மேலும் நிலத்தை வாங்கியவர்கள் அங்கேயே குடிசை போட்டு வசிக்க ஆரம்பித்தனர்.
இதையடுத்து செங்கல்பட்டு துணை தாசில்தார் ஓம்பிரகாஷ் தலைமையில் அதிகாரிகள் விரைந்து சென்று ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications