விழுப்புரம் தண்டவாள தகர்ப்பு வழக்கை சி.பி.ஐ. விசாரிக்குமா?
சென்னை: விழுப்புரம் அருகே தண்டவாளம் குண்டு வைத்து தகர்க்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் பற்றி தகவல் ஏதும் கிடைக்காததால் க்யூ பிரிவு போலீசார் திணறி வருகின்றனர். இதனால் இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த ஜூன் 12-ம் தேதியன்று விழுப்புரம் மாவட்டம் சித்தணி கிராமத்தில் உள்ள தண்டவாளம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக க்யூ பிரிவு போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்துக்கு விடுதலைப்புலிகள் ஆதரவு இயக்கங்கங்கள் காரணமாக இருக்கலாம் என்பதால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தமிழர் தேசிய இயக்கம் உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்களை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வந்தனர்.
2,3 நாட்களுக்கு மேல் நடந்த விசாரணையில் இந்த வழக்கிற்கு தொடர்புடையவர்கள் மற்றும் அவர்களை அறிந்தவர்கள் குறித்து எந்த விவரமும் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
சம்பவம் நடந்து ஒரு வாரம் ஆகியும், அதில் தொடர்புள்ளவர்கள் பற்றி எந்த ஒரு உறுதியான தகவலும் தெரியாமல் உள்ளது.
இந்த நிலையில், ஒரு குறிப்பிட்ட கோணத்திலேயே க்யூ பிரிவு போலீசார் விசாரணை நடத்துவதால் தான் உண்மையான குற்றவாளிகள் இன்னும் பிடிபடாமல் இருப்பதாகவும், அதனால் இந்த வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன. எனவே, இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications