நாகர்கோவில்: கடலுக்குச் சென்ற 7 மீனவர்கள் மாயம்
நாகர்கோவில்: நாகர்கோயில் அருகே கடலில் மீன் பிடிக்க சென்ற 7 மீனவர்கள் பல நாட்கள் ஆகியும் கரை திரும்பவில்லை. இவர்களை மீட்க அரசு விரைந்து நவடிக்கை எடுத்து வருகிறது.
குமரி மாவட்டம் இரவிபுத்தன்துறையை சேர்ந்த மினி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த மே 31ம் தேதி பிஜூ (36), பினு (26), கிளிட்டஸ் (48), ஈசாக் (52), சின்னத்துறையை சேர்ந்த ஷாஜி (29), கேரள மாநிலம் மரியநாடு காலனியை சேர்ந்த மணி என்ற வர்கீஸ் (53), அவரது மகன் சதீஷ் (18) ஆகிய 7 பேரும் முட்டம் கடல் பகுதியில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
இவர்கள் இந்த மாதம் 10, 11 தேதிகளில் கரை திரும்புவதாக இருந்தது. ஆனால், அவர்கள் சென்ற விசைப்படகு கடலில் மாயமாகிவிட்டது.
இதையறிந்த சக மீனவர்கள் படகுகளில் சென்று தேடிய போது அவர்களை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந் நிலையில், மீனவர்கள் காணாமல் போனது குறித்து காவல் நிலையத்திலும், மீன் வள அதிகாரியிடமும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து கப்பல் படை கப்பல், சிறிய ரக விமானம், அதிநவீன படகுகளில் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications