15 ஆண்டு கால இந்தியக் கனவு நனவானது-ஆசியா கோப்பையை வென்றது

இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகள் கலந்து கொண்ட ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடந்தது. இதில் இறுதிப் போட்டிக்கு இந்தியாவும், இலங்கையும் தகுதி பெற்றன. நேற்று இறுதிப் போட்டி நடைபெற்றது.
டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர் கம்பீர் 15 ரன்களில் ரன் அவுட் ஆக தினேஷ் கார்த்திக் வசம் ரன் குவிக்கும் பொறுப்பு வந்தது. அவரும் நிதானமாக ரன்களைக் குவிக்க ஆரம்பித்தார். பொறுமையாகவும், நிதானமாகவும், அதேசமயம் சரியான ஷாட்களை அடித்தும் ஆடிய தினேஷ் 66 ரன்களைக் குவித்தார்.
அதேபோல ரோஹித் சர்மாவும் பொறுப்புடன் ஆடி 41 ரன்களை எடுத்தார். மற்றவர்களில் கேப்டன் டோணி 38 ரன்கள், கோலி 28, ரெய்னா 29 ரன்களை எடுத்தனர். இறுதியில், 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 268 ரன்களை எடுத்தது இந்தியா.
பின்னர் ஆட வந்த இலங்கையை இந்தியப் பந்து வீசசாளர்கள் தடுமாற வைத்தனர். இதனால் ரன் குவிக்க முடியாமல் திணறியது இலங்கை. அந்த அணியில் அதிகபட்சமாக கபுகதேரா 55 ரன்களை எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய பந்து வீச்சாளர்களில் ஆசிஷ் நெஹ்ரா அபாரமாக பந்து வீசி 4 விக்கெட்களையும், ஜாகிர்கான் 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். ரவீந்திர ஜடேஜாவின் பங்கு 2 விக்கெட்.
இறுதியில் 81 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று கோப்பையை வென்றது.
ஆசியா கோப்பையை இந்தியா வெல்வது 5வது முறையாகும். 1984, 1988, 1990-01, 1995-ம் ஆண்டுகளிலும் இந்தியா கோப்பையை வென்றிருந்தது.ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக இந்தியாவால் கோப்பையை வெல்ல முடியாமல் இருந்தது. கடைசியாக 1995ம் ஆண்டு அசாருதீன் தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றிருந்தது.
டோணி தலைமையிலான இந்திய அணி ஆசிய கோப்பையை வெல்வது இதுவே முதல் முறையாகும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications