போர்க்குற்ற விசாரணை தொடர்பான ஐ.நா. குழு-ஏற்குமாறு இலங்கைக்கு அமெரிக்கா அறிவுரை
வாஷிங்டன்: விடுதலைப் புலிகளுடன் நடந்த இறுதிக்கட்ட போரின்போது நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள ஐ.நா. குழுவை இலங்க அரசு ஏற்க வேண்டும் என அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.
இலங்கையின் போர்க்குற்ற நடவடிக்கைகள் குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்துள்ளார் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன். இதற்கு இலங்கை கடும் அதிருப்தியும், எரிச்சலும் வெளியிட்டுள்ளது.
விசாரணைக் குழுவினரை இலங்கைக்குள் நுழைய விட மாட்டோம் எனவும் எச்சரித்துள்ளது.
இந்த நிலையில், இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை கருத்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியுறவுத்துறை துணை செய்தித் தொடர்பாளர் மார்க் டோனர் கூறுகையில், இந்த வாய்ப்பை இலஙகை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தனதுதரப்பு நியாயத்தை நிரூபிக்க இதை அது பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும் என்றார்.
விசாரணைக் குழுவில் இடம் பெற்றுள்ள ஸ்டீவன் ரட்னர் என்பவர் அமெரிக்காவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற இருவர் இந்தோனேசியாவைச் சேர்ந்த முன்னாள் வழக்கறிஞர் மர்சுகி தருஸ்மன், தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த யாஸ்மின் சூகா ஆகியோர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications