பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்த அழகிரி!

ஆனால், இக்கூட்டத்தில் திமுக சார்பில் கலந்து கொண்ட மத்திய ரசாயணத்துறை அமைச்சர் மு.க.அழகிரி விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு திமுகவின் ஆட்சேபனையை எழுத்துப்பூர்வமாகவும் பதிவு செய்தார்.
இதுதொடர்பாக அழகிரி அளித்த எதிர்ப்பு அறிக்கையில், பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்துவது என்ற முடிவு, சாதாரண மக்கள் மீது மேலும் சுமையை ஏற்றுவதாக அமையும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதே போல விவசாயத் துறை அமைச்சர் சரத் பவாரும் விலை உயர்வை கடுமையாக எதிர்த்தார்.
இருப்பினும் இந்த எதிர்ப்பையும் மீறி பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
ஆனால், நேற்று நடந்த அமைச்சர்கள் குழுக் கூட்டத்திற்குப் பின்னர் முரளி தியோரா செய்தியாளர்களிடம் பேசுகையில், விலை உயர்வு அதிகம் கிடையாது. குறைவானதுதான். இதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. அமைச்சர்கள் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்துக் கட்சிகளுமே இதை ஏற்றுக் கொண்டுவிட்டன என்றார்.
திமுக போராட வேண்டும்-வெங்கையா நாயுடு:
இந் நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து திமுக போராட வேண்டும் என்று பாஜக மூத்த தலைவரான வெங்கையா நாயுடு கூறினார்.
சென்னை வந்த அவர் விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசுகையில், பெட்ரோல், டீசல், சமையல் கேஸ், மண்ணெண்ணெய் விலை உயர்வால் நடுத்தர மக்களும் ஏழை மக்களும் மிகவும் பாதிக்கப்படுவார்கள்.
மேலும் அனைத்து துறைகளிலும் இது பாதிப்பை உருவாக்கும். இதனால் நாட்டின் பொருளாதாரம் சீர்குலையும்.
விலை உயர்வை எதிர்த்து பாஜகவும், கூட்டணி கட்சிகளும் பெரும் போராட்டத்தை நடத்துவோம். அதே போல மத்தியில் ஆட்சியில் பங்கேற்றுள்ள திமுகவும் எரிபொருள் விலை உயர்வை எதிர்த்துப் போராட்டம் நடத்த வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications