பெட்ரோல் விலை உயர்வால் திமுக அரசுக்கு அவப்பெயர்-கி.வீரமணி
சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்வால், திமுக அரசுக்கும், அது இடம் பெற்றுள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கும் அவப் பெயரே ஏற்படும் என தி.க. தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் விலை உயரும், உயரும் என்று கூறி இறுதியில் நேற்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் சுவிஸ் வங்கி போன்ற பல நாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள நிலையில், அவைகளை வெளியே கொண்டுவர போதிய அவசர நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இப்படி முதுகொடிக்கும் இந்த முயற்சி மிகவும் கண்டிக்கத்தக்கது.
எனவே பெட்ரோல்-டீசல் விலை உயர்வை மறுபரிசீலனை செய்யவேண்டும். ஏற்கனவே பணவீக்கம் பெருகியுள்ள நிலையில் இது மேலும் பல தீய விளைவுகளை ஏற்படுத்துவது உறுதி.
இல்லத்தரசிகள் பயன்படுத்தும் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.35 வரை உயர்த்தப்பட்டிருப்பது மிகப்பெரிய மக்கள் விரோதச் செயலாகும். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கும், குறிப்பாக தி.மு.க.வுக்கும் கூட இதனால் பெரும் அளவுக்கு அவப்பெயர் ஏற்படும்.
தேவைப்படும் நிதி ஆதாரங்களை ஏழை, எளிய மக்களை பாதிக்காத வகையில் புதிய வகைகளை நிபுணர்களை கலந்தாலோசித்து, பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கைவிடவேண்டும். குறைந்தபட்சம் இதனை குறைக்கவாவது செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications