பெட்ரோல் விலை உயர்வை ரத்து செய்ய சீத்தாராம் யெச்சூரி கோரிக்கை
மதுரை: மத்திய அரசு பெட்ரோல், டீசல், எரிவாயு விலையை கடுமையாக உயர்த்தியுள்ளது. இதனால் ஏழை - எளிய மக்கள் பாதிக்கப்படுவார்கள். இதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது எனவே, பெட்ரோரால் விலை உயர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி கோரியுள்ளார்.
எரிவாயு, பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியதைக் கண்டித்து மதுரையில் தொழிலாளர் துணை ஆணையாளர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு யெச்சூரி பேசுகையில்,
மத்திய அரசு பெட்ரோல், டீசல், எரிவாயு விலையை கடுமையாக உயர்த்தியுள்ளது. இதனால் ஏழை - எளிய மக்கள் பாதிக்கப்படுவார்கள். இதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது.
பெட்ரோலிய பொருட்களின் மீதான வரியை குறைப்பதன் மூலம் விலை உயர்வை தடுக்கலாம். எனவே, உடனே பெட்ரோலிய பொருட்களின் மீதான வரியை ரத்து செய்ய வேண்டும்.
சமீபத்தில் மத்திய அரசு 3 ஜி ஸ்பெக்ட்ரத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் லாபம் சம்பாதித்துள்ளது. இந்த லாபத்தை மக்களின் சமூக நலனுக்காக செலவிடலாம்.
அதே போல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடத்திய பணக்காரர்களுக்கு வரி விதிக்கலாம். அதன் மூலம் கிடைக்கும் வருவாயை மக்கள் நலனுக்கு பயன்படுத்தலாம். இதன் மூலம் வறுமைக்கோட்டில் வாழும் ஏழை - எளிய மக்களை விடுவிக்கலாம்.
அதைவிடுத்து வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் மக்களின் தலையில் மத்திய அரசு சுமையை ஏற்றியுள்ளது. இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
பணக்காரர்கள் பணக்காரர்களாக ஆகிக் கொண்டிருக்கிறார்கள். ஏழை மக்கள் மேலும் ஏழைகளாக மாறிக் கொண்டிருக்கின்றார்கள்.
கடந்த மூன்று மாதத்தில் பெட்ரோல் - டீசல் விலையில் எந்த உயர்வும் ஏற்படவில்லை. ஆனால் மத்திய அரசு விலையை உயர்த்தியுள்ளது.
மத்திய அரசின் இந்த விலை உயர்வுக்கு எதிராக மக்கள் போராட வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்துகிற போராட்டங்களுக்கு மக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications