கொடநாடு: ஜெயலலிதா டீ பேக்டரி-விசாரணைக்கு உத்தரவு

Subscribe to Oneindia Tamil

Tea Estate
சென்னை: நீலகிரி மாவட்டம் கொடநாடு எஸ்டேட்டில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விதிகளுக்குப் புறம்பாக டீ பேக்டரி கட்டி வருகிறாராஎ என்பது குறித்து விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரி ஒருவரை தமிழக அரசு நியமித்துள்ளது.

இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

28.6.2010 அன்று கோவையில் முதல்வர் கருணாநிதியை செய்தியாளர்கள் சந்தித்த போது, செய்தியாளர் ஒருவர் கொடநாடு எஸ்டேட்டில் எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா ஒரு பெரிய டீ பேக்டரி கட்டிக் கொண்டிருக்கிறார் என்றும், விதி முறையை மீறி கட்டப்பட்டு வருவதாக தெரிகிறது என்றும், அதன் மீது ஏதாவது நடவடிக்கை எடுக்கப்படுமா என்றும் கேள்வி கேட்ட போது,

முதல்வர் கருணாநிதி, அந்தச் செய்தியாளர் தெரிவித்த செய்தி புதிரானது என்றும், எனினும் அவசரப்பட்டு எந்த நடவடிக்கையும் எடுக்காமல், சட்ட ரீதியான நடவடிக்கைகளை இந்த அரசு மேற்கொள்ளும் என்றும் தெரிவித்திருந்தார்.

இதனையொட்டி இந்தப் பிரச்சனை குறித்து உரிய முறையில் விசாரித்து உண்மைத் தகவல்களை அரசுக்குத் தெரிவிப்பதற்காக ஊரக வளர்ச்சி இயக்குநர் த. உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் இந்தப் பிரச்சனை பற்றி பூர்வாங்க விசாரணையை மேற்கொண்டு அரசுக்கு விரைவில் அறிக்கை தருவார் என்று கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+