அதிர்ஷ்டத்தை அள்ளி தரும் வெள்ளை எருக்கச்செடி

பண்டை காலங்களாக எருக்கஞ் செடி என்றாலே பொதுமக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டு வந்தது. இச்செடிகள் அதிகமாக புன்செய் நிலத்தில் மட்டுமே காணப்படும். இதனால் வீடுகளில் வளர்த்தாலே அது அபசகுணம் என்று கூறுவர். இச்செடிகள் பாழடைந்த வீடுகளில்தான் வளர்ந்து நிற்கும். இதனால் நன்றாக வாழ்ந்து வரும் வீடுகளில் முளைத்தால் கூட அது குடும்பத்திற்கு ஆகாது என்பர். ஆனால் இப்படி வெறுத்து ஒதுக்கப்பட்ட எருக்கச் செடிக்கு தற்போது பாவூர்சத்திரம் மற்றும் கடையம் சுற்று வட்டார பகுதிகளில் அதிகம் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
எருக்கஞ் செடியில் 2 வகைகள் உள்ளன. இதில் ஒரு வகை செடி நீல நிறத்திலும் மற்றொன்று வெள்ளை நிறத்திலும் பூக்கும். இதில் வெள்ளை பூ செடிக்குதான் அதிக கிராக்கி உள்ளது. அதாவது அந்த செடியை சில வீடுகளில் தெய்வத்திற்கு இணையாக மதிக்கின்றனர். சில வீடுகளில் துளசி செடியை நடுவில் வைப்பது போன்று இந்த வெள்ளை எருக்கஞ் செடியை வீட்டின் முன்பு வளர்க்கின்றனர்.
இப்பகுதியில் இந்த செடியை பண்ணைகள் அமைத்து அதன் மூலம் கிராமங்களில் விற்பனை செய்கின்றனர். ஒரு செடி 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்கப்படுகின்றது. இதில் பெரிய செடிகளின் தண்டு பகுதியை சிறிய பிள்ளையார் சிலை செய்வதற்காக வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். இதனால் அதிகமானோர் இந்த செடி வீட்டில இருந்தாலே பிள்ளையார் வீட்டில் இருப்பது போன்று நினைக்கின்றனர்.
அத்துடன் இந்த செடி வீட்டில் இருந்தால் பணவரவு அதிகரிக்கும். மேலும், தீய சக்திகள் வீட்டை அணுகாது என்ற ஐதீகத்தையும் கொண்டுள்ளனர். இதனால் கடையம் அருகேயுள்ள மாதாபுரம், கனாவூர், புலவனூர், பாவூர்சத்திரம், கீழப்பாவூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இந்த செடியை அதிகமாக வளர்த்து வருகின்றனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications