வெளிநாடுகளில் வேலை-பெண்களை விபச்சாரத்தில் தள்ளிய 4 பேர் கைது
சென்னை: வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி அழைத்துச் சென்று பெண்களை விபச்சாரத்திற்கு விற்ற புரோக்கர்களில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
நேற்று சென்னை விபசார தடுப்பு போலீசில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண் புகார். அதில்,
ஏற்கனவே நான் சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் நடனம் ஆடி இருக்கிறேன். இதே போன்று சிங்கப்பூருக்கு நடனம் ஆட அழைத்துச் செல்வதாக சில புரோக்கர்கள் கூறினார்கள். மாதம் ரூ. 40,000 வரை சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை காட்டினார்கள்.
இதை நம்பி அவர்களை திருவல்லிக்கேணியில் உள்ள லாட்ஜ் ஒன்றில் சந்திக்க சென்றேன். அப்போது அங்கிருந்த ஒருவர் என்னை பலவந்தமாக அவர் இச்சைக்கு விருந்தாக்க முயன்றார்.
நான் மறுக்கவே என்னை தகாத வார்த்தைகளால் பேசி அங்குள்ள அறை ஒன்றில் அடைத்து வைக்க முயன்றனர். அவர்களிடம் இருந்து தப்பி வந்து நான் இந்த புகாரை கொடுக்கிறேன்.
என்னைப் போன்ற இளம்பெண்கள் பலரை இந்த கும்பல் சிங்கப்பூர், மலேசியாவில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் நடனம் ஆடும் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றியுள்ளனர்.
இவர்களிடம் ஏமாறும் பெண்களை சிங்கப்பூர், மலேசியாவிற்கு அழைத்துச் சென்று விபசாரத்திற்கு விற்றுள்ளனர். இது குறித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து போலீஸார் நடவடிக்கையில் இறங்கினர். போலீஸார் நடத்திய வேட்டையில், அன்பு (35), தர்மராஜ் (28), முருகன் (35), புச்சிபாபு (26) ஆகிய 4 புரோக்கர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 4 செல்போன்களும், 4 பாஸ்போர்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
4 பாஸ்போர்டுகளும் 4 இளம்பெண்கள் பெயரில் இருந்தது. இதைப் போன்ற ஏராளமான மோசடி கும்பல் சென்னையில் இருப்பதாகவும், அவர்களை உடனடியாக பிடிக்கும்படியும் கமிஷ்னர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications