சேலம், திருவள்ளூரில் மேலும் 2 தனியார் மருத்துவக் கல்லூரிகள்!
சென்னை: தமிழகத்தில் இந்தக் கல்வியாண்டில் மேலும் இரு தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அகிய இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி வழங்கும் என்று தெரிகிறது.
சேலத்தில் ஸ்ரீ அன்னபூரணி மருத்துவக் கல்லூரி, சென்னை அருகே திருவள்ளூரில் டி.டி.நாயுடு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றை அகில இந்திய மருத்துவக் கவுன்சில் அதிகாரிகள் குழுவினர் சமீபத்தில் ஆய்வு செய்தனர்.
சேலம் ஸ்ரீ விநாயகா மிஷன் அறக்கட்டளை சார்பில் தொடங்கப்படும் ஸ்ரீ அன்னபூரணி மருத்துவக் கல்லூரி, 150 எம்.பி.பி.எஸ். இடங்களில் மாணவர்களைச் சேர்க்க அனுமதி கோரியுள்ளது.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட இந்தக் கல்லூரி அனுமதி கோரியுள்ளது. இதனால் இந்தக் கல்லூரியிலிருந்து அரசு ஒதுக்கீட்டுக்கு 97 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைக்கும்.
அதேபோல திருவள்ளூர் டி.டி.நாயுடு கல்லூரியும் 150 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு அனுமதி கோரியுள்ளது. இங்கும் அரசு ஒதுக்கீட்டுக்கு 97 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.
அதே போல சென்னை திருவேற்காட்டில் உள்ள ஸ்ரீ முத்துக்குமரன் மருத்துவக் கல்லூரியும், வண்டலூர் அருகே தாகூர் மருத்துவக் கல்லூரியும் ஏற்கனவே தலா 150 எம்.பி.பி.எஸ். இடங்களில் நடப்புக் கல்வி ஆண்டில் மாணவர்களைச் சேர்க்க அகில இந்திய மருத்துவக் கவுன்சிலின் அனுமதியை கோரியுள்ளன.
இந்தக் கல்லூரிகள் மூலமும் அரசு ஒதுக்கீட்டுக்கு தலா 97 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைக்கும்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications